முகப்பு /செய்தி /வணிகம் / பெண்கள் சொந்த காலில் நிற்க ரூ. 2 லட்சம் கடன்.. அப்ளை செய்வது எப்படி? முழு விபரம்!

பெண்கள் சொந்த காலில் நிற்க ரூ. 2 லட்சம் கடன்.. அப்ளை செய்வது எப்படி? முழு விபரம்!

லோன்

லோன்

மகிளா மணி என்ற அமைப்பு சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு கடன் வழங்கி வருகிறது.

  • Last Updated :

21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் வரை கடன் பெற முடியும்  என்பது  உங்களுக்கு தெரியுமா?

சுயதொழில் செய்வது வருமானத்திற்கானது மட்டுமல்ல அவை பெண்களுக்கு நம்பிக்கை விதையையும் விதைக்கின்றன. இன்றைய சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். கூடவே பெண்களுக்கு அரசு மானியமும் தந்து உதவுகிறது. குறிப்பாக கொரோனா பரவலுக்குப் பிறகு பல பெண்கள் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது வரவேற்க தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

சுயதொழில் செய்ய நினைக்கும் பெண்கள் அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுலபமான கடன் வசதி திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவர்களது திட்ட அறிக்கை,தொழில் உரிமம், தொழில் நடக்கும் முகவரி, அனுபவச் சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் அளித்து கடன் பெறலாம்.

இதையும் படிங்க.. INOX InstaPay Wallet : மூவி டிக்கெட் புக் செய்பவர்களுக்கு காத்திருக்கும் சலுகைகள்!

இதே போல தான் ’மகிளா மணி’ என்ற அமைப்பும் சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு கடன் வழங்கி வருகிறது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் மகிளா மணி சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன்களை வழங்கி வருகிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுய தொழில் தொடங்க ரூ.2 லட்சம் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. வட்டி விகிதம் 20 சதவீதம் ஆகும். 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை கடன் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் EMI முறையில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

விருப்பமுள்ளவர்கள், மகிளா மணி அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று இதற்காக விண்ணப்பிக்கலாம். தளத்தில் தோன்றும், MM லோன் என்ற விருப்பத்தை தேர்வு லோனுக்கு அப்ளை செய்யலாம். உங்கள் விவரங்களை பதிவு செய்த பிறகு மகிளா மணி குழு உறுப்பினர்கள் உங்களை தொடர்பு கொண்டு இதுக் குறித்து பேசுவார்கள். வழக்கமான எல்லா கடன்களை போலவே இதற்கும் செயலாக்க கட்டணம், அபராதம் அனைத்தும் உண்டு.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bank Loan, Loan