ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஃபோன் பே தொடரந்த வழக்கில் மொபைல் பே-க்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு... சென்னை உயர்நீதிமன்றம்

ஃபோன் பே தொடரந்த வழக்கில் மொபைல் பே-க்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு... சென்னை உயர்நீதிமன்றம்

மொபைல் பே-க்கு இடைக்கால தடை

மொபைல் பே-க்கு இடைக்கால தடை

PhonePe Trademark Suit | வர்த்தக சின்னம் பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கபட்ட  இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், இரண்டு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தபோது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரபட்டதையடுத்து விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Also see...17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

அதுவரை  பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள  மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட  இடைக்கால தடையை நீட்டித்தும் நீதிபதி  உத்தரவிட்டார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai High court, Phonepe, UPI