முகப்பு /செய்தி /வணிகம் / சிலிண்டர் விலை முதல் IMPS கட்டணம் வரை - இன்று முதல் மாறும் விதிகள்...

சிலிண்டர் விலை முதல் IMPS கட்டணம் வரை - இன்று முதல் மாறும் விதிகள்...

சிலிண்டர்

சிலிண்டர்

LPG prices to IMPS fee : பிப்ரவரி 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் சில வங்கி மற்றும் நிதி சார்ந்த விதிகள் மாறுகின்றன. இவை சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. ஆகவே, நாம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிப்ரவரி 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் சில வங்கி மற்றும் நிதி சார்ந்த விதிகள் மாறுகின்றன. இவை சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. ஆகவே, நாம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலிண்டர் விலை உயர்வு முதல் ஐஎம்பிஎஸ் பணபரிவர்த்தனைகளுக்கான கட்டண உயர்வு வரை சாதாரண மனிதர்களின் பாக்கெட்டில் கை வைக்கும் எண்ணற்ற மாற்றங்கள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளன. வங்கி சேவைகளை எப்போதாவது பயன்படுத்தினாலும், இல்லை தினசரி பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் இந்த மாற்றங்களை தெரிந்து கொள்வது அவசியம். வாடிக்கையாளர்கள் சிலருக்கு இதுகுறித்து மெசேஜ் வந்திருக்கக் கூடும். இருப்பினும், இந்த செய்தியிலும் அதுகுறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

எஸ்பிஐ ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணம்

ஐஎம்பிஎஸ் முறையில் பரிவர்த்தனை செய்யக்கூடிய பணத்தின் அளவை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உயர்த்தியுள்ளது. எனினும், ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 + ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அந்த வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், முன்பு போல ரூ.2 லட்சத்திற்கும் குறைவான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.

இதையும் படியுங்கள் : State Bank வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க.. அடுத்த மாதம் முதல் வர போகிறது அதிரடி மாற்றம்!

பிஎன்பி வங்கியின் மினிமம் பேலன்ஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இஎம்ஐ அல்லது இதர இன்ஸ்டால்மென்ட் கட்டணங்களை செலுத்துவதற்கு அக்கவுண்டில் பணம் இல்லை என்றால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்னர் இந்த அபராதம் ரூ.100 ஆக இருந்தது.

பேங்க் ஆப் பரோடா பாசிடிவ் பே

பேங்க் ஆப் பரோடா வங்கியில் செக் மூலமான பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது குறித்த செய்தியை உறுதி செய்வது கட்டாயமாகும். எனினும் ரூ.10 லட்சத்துக்கும் மிகையான செக் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.

இதையும் படியுங்கள் : பிப்ரவரியில் வங்கிகள் 12 நாட்களுக்கு செயல்படாது.. விடுமுறை விவரங்கள் உள்ளே!

சிலிண்டர் விலை மாற்றம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஆகவே, புதிய மாதத்தில் சிலிண்டர் ஆர்டர் செய்வதற்கு முன்பாக கட்டணங்களை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி (இன்று)  தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் பேப்பர்லெஸ் முறையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் மூலமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில் ஏதேனும் சலுகை அறிவிக்கப்படும் பட்சத்தில், அதைப் பொறுத்து வங்கி அல்லது நிதி சேவைகளின் விதிகள் மாறுபடலாம்.

First published:

Tags: February, LPG, LPG Cylinder