வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Gas) விலை இன்று முதல் ரூ.105 அதிகரித்து டெல்லியில் ரூ.2021க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
தற்போது, ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ( Commercial LPG cylinder) விலை ரூ.105 அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: உக்ரைன் போர் எதிரொலி: சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்வு
இந்த விலை உயர்வு மூலம், இன்று முதல் டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.2,012 ஆக உள்ளது. இதற்கிடையில், 5 கிலோ சிலிண்டரின் விலையும் ரூ.27 அதிகரித்துள்ளது. இப்போது டெல்லியில் 5 கிலோ சிலிண்டர் விலை ரூ.569 ஆக உள்ளது. வீட்டு உயயோக எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படுகிறது.
நேஷனல் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முன்பு பிப்ரவரி 1 ஆம் தேதி 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.91.50 குறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.