Home /News /business /

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.101 உயர்வு

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.101 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டர்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாதது போல புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    குறிப்பாக சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. மாதம் மாதம் விலை அதிகரித்து, அக்டோபர் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நீடித்தது. தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

    இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (டிசம்பர் ) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாத விலையிலேயே தொடருவதாக அறிவித்துள்ளது.

    எனினும், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50- க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி ரூ.1865 ஆக இருந்த சிலிண்டர் விலை இரண்டு மாதங்களில் 369 ரூபாய் அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Gas Cylinder Price, Price hike

    அடுத்த செய்தி