LPG price hike : சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு... புதிய விலை இன்று முதல் அமல்

LPG price hike : சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு... புதிய விலை இன்று முதல் அமல்

கேஸ் சிலிண்டர்

Gas Cylinder Price Hike : டெல்லியில் ஒரு கேஸ் சிலிண்டர் (14.2 கிலோ) விலை 769 ரூபாயாகவும், சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் 785 ரூபயாக உயர்ந்துள்ளது.

  • Share this:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எல்.பி.ஜி சமையைல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 2-வது முறையாக எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் ஒரு கேஸ் சிலிண்டர் (14.2 கிலோ) விலை 769 ரூபாயாகவும், சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் 785 ரூபயாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு மீது மாநிலங்கள் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் கேஸ் விலையில் மாற்றம் இருக்கும்.

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை அரசால் இயங்கும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது மற்றும் இது மாத அடிப்படையில் திருத்தப்படுகிறது. சர்வதேச எரிபொருள் விகிதங்கள் மற்றும் அமெரிக்க டாலர் ரூபாய் மாற்று விகிதங்களைப் பொறுத்து, விலைகள் உயரலாம் அல்லது குறையலாம்.

உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு இந்திய அரசு தற்போது மானியம் வழங்கி வருகிறது. சிலிண்டர் வாங்கிய பின்னர் மானியத் தொகை நேரடியாக தனிநபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
Published by:Vijay R
First published: