• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சமையல் எரிவாயு விலை ரூ. 1.46 குறைந்தது!

சமையல் எரிவாயு விலை ரூ. 1.46 குறைந்தது!

கோப்புப் படம்  (Photo: Reuters)

கோப்புப் படம் (Photo: Reuters)

சென்னையில் மானியத்துடன் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் விலை 482 ரூபாய் 88 காசுகளில் இருந்து 481 ரூபாய் 42 காசுகளாக குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பிஃப்ரவரி மாதம் 1 ரூபாய் 46 காசுகள் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் மானியத்துடன் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் விலை 482 ரூபாய் 88 காசுகளில் இருந்து 481 ரூபாய் 42 காசுகளாக குறைந்துள்ளது.

இதேபோல் மானியம் இல்லாத சிலிண்டரின் விலையும் 30 ரூபாய் குறைக்கப்பட்டு, 704 ரூபாய் 85 காசுகளில் இருந்து, 674 ரூபாய் 85 காசுகளாக குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

மானிய விலை சிலிண்டர் டெல்லியில்  493.53 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 496.57 ரூபாயாகவும், மும்பையில் 491.19 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மானியமில்லா சிலிண்டர் டெல்லியில்  659 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 683 ரூபாயாகவும், மும்பையில் 630 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

19 கிலோ சிலிண்டர் டெல்லியில் 1170 ரூபாயகவும், கொல்கத்தாவில் 1217.50 ரூபாயாகவும், மும்பையில் 1117 ரூபாயாகவும், சென்னையில் 1267.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: பட்ஜெட் 2019: சாமானியனின் எதிர்பார்ப்பு என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: