முகப்பு /செய்தி /வணிகம் / LPG Price: பிப்ரவரி 1.. சிலிண்டர் விலையில் மாற்றம் உண்டா? இன்றைய நிலவரம் இதுதான்!

LPG Price: பிப்ரவரி 1.. சிலிண்டர் விலையில் மாற்றம் உண்டா? இன்றைய நிலவரம் இதுதான்!

கேஸ் சிலிண்டர்

கேஸ் சிலிண்டர்

LPG gas Price today : ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று பிப்ரரி 1ஆம் தேதி என்பதால், சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநேரத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ஆவதும் கூடுதல் கவனம் பெற்றது. இந்நிலையில் கடந்த மாதங்களைப் போலவே வீட்டு பயன்பாடு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.

அந்த வகையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை சென்னையில் விலை ரூ.1,068.50 எனவும் அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தக ரீதியான சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1917ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றன

மற்ற நகரங்களை பொறுத்த வரை 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் டெல்லியில் 1769 ரூபாயாகவும், மும்பையில் 1721 ரூபாயாகவும் உள்ளது

First published:

Tags: LPG