ஹோம் /நியூஸ் /வணிகம் /

டிசம்பர் 1: சமையல் கேஸ் விலை எவ்வளவு? குறைவா அதிகரிப்பா?

டிசம்பர் 1: சமையல் கேஸ் விலை எவ்வளவு? குறைவா அதிகரிப்பா?

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை

 கடந்த நவம்பர் மாதம், வர்த்தக ரீதியான சமையல் சிலிண்டர் விலை, ரூ.115 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலையில் கடந்த சில நாட்களாகவே எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், சமையல் எரிவாய் சிலிண்டரின் விலையில்  மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வீட்டு பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேபோல், கடந்த 6 மாதங்களாகவே வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதன் விலையும் குறைக்கப்படவில்லை.  கடந்த நவம்பர் மாதம், வர்த்தக ரீதியான சமையல் சிலிண்டர் விலை, ரூ.115 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிறந்தது டிசம்பர்... இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.! 

14 கிலோ சிலிண்டர் .டெல்லியில் கடந்த மாதம் இருந்த ரூ1,053 விலையில் நீடிக்கிறது. கொல்கத்தாவில் ரூ.1,079, மும்பையில் ரூ.1052, சென்னையில் ரூ.1068 விலையில் நீடிக்கிறது.

19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1744, மும்பையில் ரூ.1696, சென்னையில் ரூ.1891.50, கொல்கத்தாவில் 1845.50 விலையில் நீடிக்கிறது.

First published:

Tags: Gas Cylinder Price, LPG Cylinder