சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது கேஸ் சிலிண்டர் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது. இதனால், ஹோட்டல், டீ கடை போன்றவற்றின் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Must Read : தமிழகத்தில் 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
ஒரே மாதத்தில் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.