lpg cylinder : நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்வதை போல மாதத்திற்கு மாதம் சிலிண்டர் விலையும் விண்ணை முட்டும் உயரத்திற்கு அதிகரித்து வருகிறது. சிலிண்டர் விலை உயர்வால் பலரும் அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். குறைந்த விலையில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான வழியும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?.
தற்போது, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகள் நாம் அனைவரின் வாழ்க்கையையும் எளிதாகிவிட்டது. அது மட்டும் அல்ல, இதம் மூலம் பணம் செலுத்தினால் பல சலுகைகளும் கிடைக்கும். அந்த வகையில், நீங்கள் Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் 50% வரை சலுகை கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகைகள் வருடம் முழுக்க வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், எந்த நாளில் எந்த கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
Paytm மூலம் LPG சிலிண்டரை எவ்வாறு பதிவு செய்வது?
முதலில் Paytm செயலிக்குள் நுழையவும்.
பிறகு ரீசார்ஜ் & பில் பேமெண்ட்ஸ் சென்று 'புக் கேஸ் சிலிண்டர்' என்பதைக் கிளிக் செய்யவும்.
பிறகு கேஸ் சிலிண்டரை புக் செய்து உங்கள் கேஸ் வழங்குனரை தேர்வு செய்யவும்.
அதன் பிறகு, LPG ஐடி அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும். பின்னர் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான பணம் செலுத்தல் என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் ஆப்ஷன் இங்கே கொடுக்கப்படும். இதைத் தேர்ந்தெடுக்கும்போது, பணம் தானாகவே Paytm வாலட்டில் இருந்து கழிக்கப்படும்.
Paytm இணையதளம் மூலமும் காஸ் சிலிண்டரை பதிவு செய்யலாம்:
Paytm இணையதளத்தில் பதிவு செய்யவும்.
Paytm இல் Recharge & Pay Bills என்பதற்குச் சென்று காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யவும்.
எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுத்து LPG ஐடி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய Proceed to Pay அல்லது Fast Forward விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சலுகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
பணம் செலுத்துவதற்கு முன், நீங்கள் சலுகைகளைப் பயன்படுத்து என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இங்கே கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் பல சலுகைகள் காட்டப்படும். இதைப் பயன்படுத்தி நீங்கள் குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gas Cylinder Price, LPG, LPG Cylinder, Paytm, Subsidised LPG cylinders