ஹோம் /நியூஸ் /வணிகம் /

கேஸ் சிலிண்டர் விலை விரைவில் குறையலாம்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்!

கேஸ் சிலிண்டர் விலை விரைவில் குறையலாம்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

LPG Cylinder Price | கடந்த ஆண்டு, 2021 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரே ஆண்டில் சிலிண்டர் விலை ₹219 உயர்ந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கடந்த சில மாதமாக கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலையும் நிர்ணயிக்கப்படுவதால் இந்த விலையேற்றம் பலருக்கும் பாதகமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வீடுகளில் பயன்படுத்தப்படும் LPG சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை டெல்லியில் ₹ 1053 என்றும், மும்பையில் ₹ 1052.50 என்றும், கொல்கத்தாவில் அதிகபட்சமாக ₹ 1079 என்றும் சமீபத்தில் கேஸ் டீலர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டரின் விலை அதிகமாக கொல்கத்தாவில் விற்கப்படுகிறது, அதையடுத்து இரண்டாவது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் சிலிண்டரின் விலை ₹1068 50 காசு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலையும் LPG கேஸ் விலையேற்றமும்,

கடந்த ஆண்டு, 2021 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரே ஆண்டில் சிலிண்டர் விலை ₹219 உயர்ந்துள்ளது. ₹834.50 என்ற விலையில் இருந்த சிலிண்டர் ஜூலை மாதம் 2021 ஆம் ஆண்டில் விலையேற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ₹25 மற்றும் அடுத்தடுத்த மாதத்தில் கணிசமாக விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி டெல்லியில் சராசரியாக சிலிண்டர் விலை ₹299.50 என்ற நிலையில் காணப்பட்டது. அதன் பிறகு மார்ச் 2022 வரை விலை ஏற்றப்படவில்லை.

ஆனால், மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்களின் விலைகள் பேரலுக்கு $100க்கும் மேல் அதிகரிக்கப்பட்டதால், சிலிண்டரின் விலை மீண்டும் ₹50 உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு மே மாதம் வரையிலேயே இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மே மாதம் இறுதிக்குள்ளேயே வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ₹1003 உயர்ந்தது.

LPG விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

எல்பிஜியின் விலை, இறக்குமதி சமநிலை விலையின் (Import parity price) அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலே கூறியுள்ளது போல, சர்வதேச அளவில் பல்வேறு கச்சா எண்ணெய் பொருட்களின் விலை நிர்ணயிப்பதில் இது முக்கியமான பங்கு வகிக்கிறது.

IPP விலையைப் பொறுத்தவரை, பல்வேறு காரணிகள் விலையை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக FOB எனப்படும் ஃசரக்குக் கட்டணம், கடல்வழி மார்க்கத்தின் ஷிப்பிங் கட்டணம், காப்பீடு, சுங்க வரி, துறைமுக கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உள்ளன.

சமையல் எண்ணெய்யின் விலை ரூ.10 வரை குறையுமா? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை, எல்பிஜிக்கான விலை டாலரிலிருந்து ரூபாயாக மாற்றப்படும். இதனால்தான் இந்திய ரூபாயின் மதிப்புக்கு எதிரான அமெரிக்க டாலர்களின் மதிப்பு சிலிண்டர்களை பொறுத்தவரை ஒரு முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக சரியும் பொழுது பல பொருள்களுமே பெரிதாக பாதிக்கப்படும். இதுவும் சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு மறைமுகமான காரணமாக இருக்கும். மேலே கூறியுள்ள காரணங்களை தவிர உள்நாட்டில் ஏற்படக்கூடிய செலவுகளான போக்குவரத்து கட்டணம், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், சந்தைப்படுத்தும் கட்டணம், டீலர் கமிஷன், வரிகள் ஆகிய அனைத்துமே சேர்ந்து விலையை நிர்ணயிக்கின்றன.

கச்சா எண்ணெய் விலை குறைவால் கேஸ் விலை குறையுமா?

இவ்வளவு கட்டணங்கள் இருக்கையில், விலை குறையுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. ஆனால், கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு $100க்கும் குறையும் போது, அடிப்படை விலை குறைவதால், கேஸ் சிலிண்டரின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்குக், 12 வாரங்களில் 2% அளவுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: LPG, LPG Cylinder