ஹோம் /நியூஸ் /வணிகம் /

LPG Cylinder Booking | ரூ.1000 கேஷ்பேக்... இந்த வழியில் சிலிண்டரை முன்பதிவு செய்தால் பெறலாம்

LPG Cylinder Booking | ரூ.1000 கேஷ்பேக்... இந்த வழியில் சிலிண்டரை முன்பதிவு செய்தால் பெறலாம்

இந்த வழியில் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 கேஷ்பேக்

இந்த வழியில் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 கேஷ்பேக்

FREEGAS சலுகையின்  குறியீட்டில் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்த ஒவ்வொரு 500 வாடிக்கையாளர்களுக்கும் ரூ.1000 வரை கேஷ்பேக் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேஸ் கடைக்குச் சென்று, ஆன்லைனில் கேஸ் புக் செய்யும் நாட்கள் முடிந்துவிட்டன தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய பல வழிகள் உள்ளன. போன் புக்கிங் தவிர, கேஸ் புக்கிங்கை ஆன்லைனிலும் செய்யலாம் Paytm உள்ளிட்ட பணபரிவர்தனை செய்யும் ஆப் மூலமாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம் ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் Paytm மூலம் முன்பதிவு செய்தால், நிறுவனம் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது.

Paytm தற்போது எரிவாயு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு 4 கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகை 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது. GAS1000 இந்த ப்ரோமோகோடைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.5 முதல் ரூ.1000 வரை கேஷ்பேக் பெறலாம் இதேபோல், FREEGAS சலுகையின்  குறியீட்டில் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்த ஒவ்வொரு 500 வாடிக்கையாளர்களுக்கும் ரூ.1000 வரை கேஷ்பேக் வழங்கப்படும். கிரெடிட் கார்டில் இருந்து சிலிண்டர் செலுத்துவதற்கு Paytm 50 ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது இந்த சலுகைக்கான Promo Code AUCC50 ஆகும். யெஸ் பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து Paytm மூலம் காஸ் சிலிண்டர் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதற்கு, முன்பதிவு செய்யும் போது GASYESCC என்ற குறியீட்டை கொடுக்கப்பட வேண்டும்.

Paytm இலிருந்து சிலிண்டரை இந்த வழியில் பதிவு செய்யுங்கள்

முதலில் Paytm செயலியைத் திறக்கவும்
பிறகு கீழே ஸ்க்ரோல் செய்து புக் கேஸ் சிலிண்டர் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
அதன் பின் பாரத்காஸ், ஹெச்பி கேஸ், இண்டேன் போன்ற உங்கள் எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் LPG ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
இப்போது Proceed பட்டனை கிளிக் செய்யவும்
திறக்கும் பக்கத்தின் கீழே உள்ள Apply Promocode என்பதைக் கிளிக் செய்யவும்
நீங்கள் பெற விரும்பும் நான்கு சலுகைகளின் குறியீட்டை உள்ளிடவும்
Promocode கொடுத்த பிறகும் பணம் செலுத்த வேண்டும் பணம் செலுத்திய பிறகு நீங்கள் கேஷ்பேக் பெறுவீர்கள்
First published:

Tags: LPG, LPG Cylinder