Home /News /business /

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டதா, வீட்டிலிருந்தபடியே அதை மீண்டும் பெறுவது எப்படி?

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டதா, வீட்டிலிருந்தபடியே அதை மீண்டும் பெறுவது எப்படி?

ஆதார்

ஆதார்

Aadhaar card : யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் நேரடியாக அதனை டவுன்லோடு செய்து கொள்வதுடன், பிரிண்ட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் பலவற்றில் உங்களை அடையாளம் காண்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது ஆதார் அட்டை. அதே சமயம், ஆதார் அட்டையை பாதுகாப்பானதாக மாற்ற அதனுடன் பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை யுஐடிஏஐ அமைப்பு மேற்கொள்கிறது.

ஆகவே, எந்த ஒரு சேவை என்றாலும் நீங்கள் கையோடு ஆதார் அட்டை எடுத்துச் செல்வது அவசியமாகிறது. அதேசமயம், ஆதார் அட்டை தொலைந்து விட்டால் நீங்கள் எண்ணற்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அல்லது திருடு போய் விட்டால் நீங்கள் கவலை அடைய தொடங்கி இருப்பீர்கள். ஆனால், உடனடியாக அதனை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் நற்செய்தி என்னவென்றால், யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் நேரடியாக அதனை டவுன்லோடு செய்து கொள்வதுடன், பிரிண்ட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டிஜிட்டல் காப்பி ஒன்றை உங்கள் ஃபோனில் வைத்துக் கொண்டால் நீங்கள் எங்கு சென்றாலும். அட்டையை நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஆதார் அட்டையை நேரடியாக டவுன்லோட் செய்வதற்கான லிங்க் யுஐடிஏஐ தளத்தில் இருக்கிறது. https://myaadhaar.uidai.gov.in/

ஆதார் டவுன்லோட் செய்யும் நடைமுறை

* யூஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
* ஹோம் பேஜ் பக்கத்தில் டவுன்லோட் ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ஸ்கிரீனில் உள்ள செக்யூரிட்டி கோட் உள்ளிடவும்.
* இப்போது சென்ட் ஓடிபி என்பதை கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் பெறவும்.
* ஓடிபி எண் உள்ளீடு செய்து வெரிஃபை அண்டு டவுன்லோடு கொடுக்கவும்.

இதையும் படியுங்கள் : வாட்ஸ் அப் மெசேஜை டெலீட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு?

* உங்கள் விவரங்கள் வெரிஃபை செய்யப்பட்ட பிறகு, உங்களுக்கான ஆதார் அட்டை பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு ஆகும்.
* இப்போது டவுன்லோட் செய்யப்பட்ட பிடிஎஃப் ஆவணம் உங்கள் டிவைஸ்-இல் சேமிக்கப்பட்டிருக்கும். அது பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொண்டது. ஆகவே, டவுன்லோடு செய்யப்பட்ட ஆவணத்தை கிளிக் செய்து, நீங்கள் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும். இதற்கு ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துக்கள் கேப்பிடல் லெட்டர்ஸ் ஆகவும், பிறந்த ஆண்டு ஆகிய இரண்டையும் இணைத்து உள்ளீடு செய்யவும்.
* இதை செய்த பிறகு அது அன்லாக் ஆகி விடும். அதன் பிறகு உங்கள் டிவைஸ் போல்டர் அல்லது இ-மெயில் ஆகியவற்றில் இதை வைத்துக்கொண்டு தேவையான சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : முதல்முறையாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இப்படி ஒரு சரிவு!!

ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, 1947 என்ற இலவச சேவை மைய தொடர்பு எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Aadhaar card

அடுத்த செய்தி