ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் முதலீடுகள் மீது பாதுகாப்பான, நிலையான வருமானம் வேண்டுமா.? இந்த திட்டங்களை பரிசீலிக்கலாம்..

உங்கள் முதலீடுகள் மீது பாதுகாப்பான, நிலையான வருமானம் வேண்டுமா.? இந்த திட்டங்களை பரிசீலிக்கலாம்..

முதலீடுகள்

முதலீடுகள்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலகளவில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக பங்கு சந்தை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் செல்கிறது. எனவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் முதலீட்டு திட்டங்களை தொடர்ந்து தேடுகின்றனர். பாதுகாப்பான விருப்பங்களை தேடும் முதலீட்டாளர்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund மற்றும் தேசிய சேமிப்பு திட்டம் 9National savings scheme) உள்ளிட்ட சில திட்டங்கள் இருக்கின்றன. இவற்றை பற்றி தற்போது இங்கே பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்றால் என்ன?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். ரிஸ்க் எடுக்கும் எண்ணம் இல்லாத சிறு சேமிப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இது இந்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த பொது வருங்கால வைப்பு நிதி. PPF ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, மேலும் இது 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. மெச்சூரிட்டி பீரியடிற்கு பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் வருமானம் PPF அக்கவுண்ட் ஹோல்டருக்கு செலுத்தப்படுகிறது.

முத்தாய்ப்பாக இந்த திட்டம் சிறப்பு வரிச் சலுகையான EEE-ஐ (Exempt-Exempt-Exempt) கொண்டுள்ளது. அதாவது முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை மூன்றுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது தான் இதன் சிறப்பம்சம். தற்போது, PPF ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து 15 ஆண்டுகள் PPF கணக்கில் தங்கள் பணத்தை போட்டு வைக்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed deposit) என்றால் என்ன.?

FD என்பது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டமாக உள்ளது. தங்கள் முதலீட்டின் மீது உறுதியான வருவாயை பெற இந்த திட்டத்தில் பலரும் முதலீடு செய்கிறார்கள். இருப்பினும், தற்போது பெரும்பாலான FD-க்கள் பணவீக்க விகிதத்தை விட குறைவான வருமானத்தை அளிக்கின்றன. உதாரணமாக, IDFC First Bank தற்போது FD வட்டி விகிதங்களை 3.50-6.00 என்கிற சதவீத வரம்பில் வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான HDFC, 2.50 - 6.00 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி டெபாசிட்களின் கால அளவைப் பொறுத்து 3 -5.25 சதவீதத்தை வழங்குகிறது. ICICI வங்கியும் அதன் FD-க்கு 2.50-5.75 என்ற வரம்பில் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கானது.

ALSO READ | உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக முன்னேறும் இந்தியா - ரிசர்வ் வங்கி அறிக்கை

பேங்க் FD தவிர,கார்ப்பரேட் FD திட்டங்களும் உள்ளன. இது வீட்டு நிதி நிறுவனங்கள் அல்லது பிற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) உட்பட வங்கி அல்லாத நிறுவனங்களால் வழங்கப்படும் நிலையான வைப்பு வகையாகும். இந்த டெபாசிட்கள் அவற்றின் நம்பகத்தன்மைக்காக ரேட்டிங் ஏஜென்சிகளால் மதிப்பிடப்படுகின்றன.

தேசிய சேமிப்பு திட்டம் (National Savings Scheme) என்றால் என்ன..?

இது அரசால் ஆதரிக்கப்படும் குறைந்த ஆபத்துள்ள சேமிப்புத் திட்டம். நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் மூலம் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு தேவை, அதிகபட்ச வரம்பு இல்லை. தற்போது ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டியை வழங்குகிறது. இது 5 வருட லாக்-இன் பீரியட்டை கொண்டுள்ளது மற்றும் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. நாட்டில் உள்ள முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பல அம்சங்களை இத்திட்டம் கொண்டுள்ளது. National Savings Scheme-ன் முக்கிய நன்மை என்னவென்றால், இது FD-க்களை விட சிறந்த வட்டி விகிதங்களை தருகிறது என்பது தான்.

First published:

Tags: Fixed Deposit, Investment