வணிக நிறுவனங்களும், அரசாங்கமும் தங்களுடைய நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் தற்போதைய செலவின குறைபாடுகளைக் குறைப்பதற்கும் பத்திரங்களை வெளியிடுகின்றன. பத்திரம் என்பது ஒரு கடன் கருவியாகும், இதில் முதலீட்டாளர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கோ அல்லது அரசாங்கத்துக்கோ பணத்தைக் கடனாகக் கொடுக்கிறார். பத்திரம் வழங்குபவர் வழக்கமான இடைவெளியில் வட்டி செலுத்துதலுடன் பத்திர காலத்தின் முடிவில் வருமானத்தை பெறுகிறார். அதாவது Bond என்பவை கடன் பத்திரங்கள். Share என்பது பங்கு. Bondகளை நீங்கள் வாங்கியிருந்தீர்கள் என்றால் அந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால், லாபத்தில் பங்கு கொடுப்பார்கள். ஆனால், கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை, வட்டி மட்டுமே கிடைக்கும்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி தொடர்ந்து கடன் பத்திரங்களை வெளியிடுவார்கள். இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு காலகட்ட வரையறையில் பாண்டுகளை வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கி என்ன வட்டி விகிதத்தை இந்த பாண்ட்களுக்கு கொடுக்கிறதோ, அதை வைத்துத்தான் மற்றவர்கள் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள்.
BSE இன் படி, மூலதனச் சந்தை என்பது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையை உள்ளடக்கியது. கடன் சந்தை என்பது பல்வேறு வகையான கடன் கருவிகளில் வெளியீடு, வர்த்தகம் மற்றும் தீர்வுக்கான சந்தையாகும். பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர், ஆனால் பங்குச் சந்தைகளில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் அவர்களைத் தடுக்கின்றன.
Read More : வரி விலக்கு நன்மைகளுடன் கூடிய சிறந்த அஞ்சல் துறை திட்டங்களின் பட்டியல்!
பத்திரங்களின் வகைகள் என்னென்ன?
பத்திரங்களில் அரசுப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள், வரி சேமிப்பு பத்திரங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனப் பத்திரங்கள், உள்கட்டமைப்பு பத்திரங்கள், இறையாண்மை தங்கப் பத்திரங்கள் என வகைப்படுகின்றன. அது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்...
அரசுப் பத்திரங்கள் :
இந்தப் பத்திரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன மாநில அரசின் கீழ் உள்ள உள்ளூர் அரசாங்கங்களால், அதாவது நகராட்சிகள் போன்றவைகளால் வழங்கப்படுகின்றன.
கார்ப்பரேட் பத்திரங்கள் :
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தப் பத்திரங்களை வெளியிடுகின்றன. இந்தப் பத்திரங்களில் பல்வேறு துணைப் பிரிவுகள் உள்ளன.
இறையாண்மை தங்கப் பத்திரங்கள் :
இறையாண்மை தங்கப் பத்திரம் (SGB |Sovereign Gold Bond) என்பது கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசாங்கப் பத்திரங்கள் ஆகும். 2015 நவம்பரில் தங்கத்தைப் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் அரசால் சவரன் தங்கப் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. அவை தங்கத்தை பொருளாக வைத்திருப்பதற்கு மாற்றாக உள்ளன.
வரி சேமிப்பு பத்திரங்கள் :
தனிநபர்களுக்கு வரி சேமிப்பை வழங்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் பத்திரங்கள் வரி சேமிப்பு பத்திரங்கள் ஆகும். இந்த பத்திரங்களை வைத்திருப்பவர் வட்டியுடன், வரிச் சலுகையும் பெறுவார். இந்த பத்திரங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு வரியைச் சேமிக்க விரும்பும் நபர்களுக்கு முதலீடு செய்ய ஏற்றதாகும்.
வங்கி மற்றும் நிதி நிறுவனப் பத்திரங்கள் :
பல்வேறு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பத்திரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்த வகை பத்திரங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் நேர்மையின்மை, கொள்ளை, மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக செய்யப்படும் காப்பீடு ஆகும்.
உள்கட்டமைப்பு பத்திரங்கள் :
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல வங்கிகளால் வழங்கப்படும் பத்திரங்கள் உள்கட்டமைப்பு பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Government