பணத்தை சேமிக்க நினைக்கிறீங்களா? Fixed deposit -ஐ விடுங்க.. சூப்பரான இந்த திட்டங்களை தேர்ந்தெடுங்க..

பணத்தை சேமிக்க நினைக்கிறீங்களா? Fixed deposit -ஐ விடுங்க.. சூப்பரான இந்த திட்டங்களை தேர்ந்தெடுங்க..

சேமிப்பு

சேமிப்பு என்றால் வங்கிக் கணக்கில் நிலையான வைப்பு தொகை (Fixed deposit) திட்டத்தில் மட்டுமே பணத்தை சேமிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். வங்கிகளைக் காட்டிலும், சில திட்டங்களில் நம் பணத்தை சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கின்றன. அந்த திட்டங்களை சரியாக தேர்தெடுத்தால், ஒரே முதலீட்டுக்கு வங்கியில் கிடைக்கும் வட்டியைவிட கூடுதலான வட்டியை பெறலாம்.

  • Share this:
குழந்தை முதல் முதியவர் வரை பணத்தை சேமிப்பதற்கு நிறைய திட்டங்கள் உள்ளன

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்

Senior Citizen Savings Scheme என்றால் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் 60 வயத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பணத்தை சேமித்துக் கொள்ளலாம். ஒருவர் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் சேமிக்கலாம். வயதான தம்பதியினர் ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரித்துறைச் சட்டம் 80c -ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.  வங்கி சேமிப்பு கணக்குகளில் சேமிக்கப்படும் பணத்துக்கு 6.2% வட்டி அளிக்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.4 % வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மூத்த குடிமக்கள் இறந்துவிட்டால், உரிய சான்றுகளை சமர்பித்து நாமினி செய்யப்பட்டவர் சேமிப்பு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், சில திட்டங்களும் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. எந்தவொரு திட்டத்திலும் வட்டி விகிதங்கள் மாற்றி அமைப்பதற்குள் முதலீடு செய்வது சிறந்தது.

கடன் நிதி பத்திரங்களில் முதலீடு

இளைஞர்கள், தங்களின் பணத்தை கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைவான வரி இழப்புடன் அதிக வருவாய் பெறுவதற்கு இந்தவகை முதலீடுகள் சிறந்தவையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டெப்ட் மியூட்சுவல் பண்ட்டுகளில் முதலீடு செய்தவர்கள் அந்த திட்டங்களை தொடரலாம். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான சரியான நேரம் இது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 

வட்டி விகிதங்கள் சரிந்தாலோ அல்லது நிலையாகவே இருந்தாலோ முதலீட்டுகான வருவாயில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடன் பத்திரங்களுக்கான ரேட்கட் டிசம்பருக்குள் 25 pbs குறைய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஆண்டில் 25 முதல் 50pbs குறைய வாய்ப்புள்ளதாகவும் பிர்லா சன்லைப் மியூச்சுவல் பன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பாலசுப்பரமணியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "இதன்மூலம் கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம். வழக்கமான சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் இந்த திட்டங்களில் கூடுதல் வருவாய் கிடைக்க உள்ளதால், புதிய முதலீட்டாளர்கள் அதிகம் வருவார்கள் என நம்புகிறோம்", எனத் தெரிவித்தார்.

அரசு பாதுகாப்பு கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும் என கூறிய பாலசுப்பரமணியன், பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் மியூட்சுவல் பன்ட் ஆஃபர்களில் அதிகப்படியான வட்டி, கடன் ரிஸ்க், முதலீட்டு காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனக்கான திட்டத்தை முதலீட்டாளர் தேர்தெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

டைனமிக் ஃபன்ட் முதலீடு

நீண்டகால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்கள் பல்வேறு வகையான கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக அரசின் பாதுகாப்பு ஆவணங்கள், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள், மூலதன சான்றுகள், வர்த்தக சான்றுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதேபோல் எஸ்.ஐ.பி, யூலிப்ஸ் போன்ற நீண்ட சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், அனைத்து திட்டங்களையும் அலசி ஆராய்ந்து, தங்களுக்கான திட்டங்களை தேர்தெடுப்பது நல்லது. மேலும், நீண்டகால முதலீடு திட்டங்கள், நம்பகத்தன்மையுடன் இருப்பதுடன் நிலையான வருவாயை கொடுக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
Published by:Sankaravadivoo G
First published: