இந்தியாவின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மாதாந்திர திட்டங்களைப் போலவே நீண்ட கால ரீசார்ஜ் பேக்குகளையும் வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது ஓராண்டு அல்லது 365 நாள்கள் வெலிடிட்டி கொண்ட ரூ.2,999 பேக் திட்டம். இந்த ஆஃபர் பேக்கை 4ஜி தரத்தில் ஜியோ, வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய மூன்று நிறுவனங்களும் தருகின்றன. ரூ.2,999 பேக் திட்டத்தில் ஒவ்வொரு நெட்வொர்க்களும் வழங்கும் சேவை வசதிகள் இதோ..
ரிலையன்ஸ் ஜியோ ரூ.2,999 திட்டம்
ஜியோ நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டமான ₹2,999 திட்டத்தின் மூலம் ப்ரீபெயிட் பிளான் வாங்குபவர்களுக்கு 365 நாள் அல்லது ஓராண்டு வரை தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அடுத்ததாக அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. ஜியோ நெட்வொர்க் மட்டுமல்லாமல் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வரை இலவசமாக அனுப்ப முடியும். ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், ஜியோ இன்டர்நெட்டின் வேகம் 64 kpbs ஆக குறையும்.
மேலும், தீபாவளி ஆபார 75 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் ஜியோ சூட் செயலிகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.அத்துடன் பல்வேறு கூப்பன் கார்டுகளை ஜியோ வழங்குகிறது.
இதையும் படிங்க: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!
பாரதி ஏர்டெல் ரூ.2,999 திட்டம்
இந்த திட்டத்தின் வெலிடிட்டி காலம் 365 நாள்களாகும். இந்த திட்டத்தின் கீழ் இலவச அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2ஜிபி டேட்டா அத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படும். அத்துடன் FASTagஇல் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் Wynk Music இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வோடாபோன் ஐடியா ரூ.2,999 திட்டம்
இந்த திட்டத்தின் வெலிடிட்டி காலம் 365 நாள்களாகும்.அதேபோல், வோடாபோன் ஐடியாவும் ரூ.2,999 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக தருகிறது. அதேவேளை, FUP( Fair Usage policy ) என்ற திட்டத்தின் படி டேட்டாவை தினசரி கட்டுப்பாடுகளுடன் வழங்காமல், 850 ஜிபி என்று ஒட்டுமொத்தமாக ஓராண்டுக்கு வழங்கி விடுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப இதில் டேட்டாவை பயன்படுத்திச் செலவிடலாம்.மேலும், VI செயலியில் உள்ள திரைப்படங்களை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airtel, Jio, Reliance Jio, Vodafone