அதானி குழுமத்தின் செயல்பாடுகள் தொடர்பாக பல சர்ச்சைகள் அடுத்தடுத்து எழுந்து வரும் நிலையில் அந்த குழுமத்துக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் வணிக ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பெர்கின் அதானி நிறுவனத்தில் மோசடி நடந்து வருவதாக 106 பக்க அறிக்கையை கடந்த வாரம் புதன்கிழமை வெளியிட்டது. அறிக்கை வெளியானதில் இருந்து கடந்த ஆறு நாட்களில் மட்டும் அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் சந்தைமதிப்பு 43 சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.
அதாவது சுமார் ரூ.8.30 லட்சம் கோடியை அதானி நிறுவனம் இழந்துள்ளது. அதன்படி, அதானி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.10.9 லட்சம் கோடியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்படி அதானி குழுமத்தின் பங்குகள் சரசரவென்று வீழச்சியை சந்தித்து வருவது அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதே போல கடந்த மாதம் எப்.பி.ஓ மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த எப்.பி.ஓ ரத்து செய்யப்பட்டதாக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பங்குதாரர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அதானி குழுமம் அறிவித்தது
அதானி குழுமத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் சூழ்நிலையில், அந்த குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை பிணையாக ஏற்க ஸ்விட்சர்லாந்து நாட்டில் கிரெடிட்சூயிஸ் நிர்வாணம் மறுத்துவிட்டதையடுத்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி அளவில் கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம் ஆகும். எஸ்பிஐ ரூ.21,000 கோடி, பேங்க் ஆஃப் பரோடா 7000 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளன. Indusind வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் அதானி குழுமத்துக்கு அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன.
இதையும் படிங்க: குறைந்தது தங்கம், வெள்ளி விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!
இது போக இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம் 36,474 கோடியே 78 லட்சம் ரூபாய் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இது அந்நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் 1% க்கும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.
அதானி குழும சரிவால் போர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி தற்போது 4.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு பின்னால் இருந்த அம்பானி தற்போது 83 பில்லியன் டாலருடன் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.