Home /News /business /

கடன் வாங்கியவர்களை டார்ச்சர் செய்ய கூடாது..விதியை கடுமையாக்கிய ஆர்.பி.ஐ!

கடன் வாங்கியவர்களை டார்ச்சர் செய்ய கூடாது..விதியை கடுமையாக்கிய ஆர்.பி.ஐ!

பேங்க் லோன்

பேங்க் லோன்

கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் அழைப்பதற்கான நேரத்தையும் கட்டுப்படுத்துகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
     நிலுவை தொகைக்காக,  கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

    கடனை வசூலிக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்படும் நியாயமற்ற மீட்பு நடைமுறைகள் மற்றும் கடன் வசூல் முகவர்களால் பயன்படுத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான ட்ரிக்ஸ்களுக்கு எதிராக அதிகரித்து வரும் புகார்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கை வழிகாட்டுதல்களின் வரம்பை நீட்டித்துள்ள, அதே நேரத்தில் கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் அழைப்பதற்கான நேரத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    இன்னும் டைம் இருக்கு..பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நீங்களும் சொந்த வீடு கட்டலாம்!

    காலாவதியான கடன்களை வசூலிக்க லோன் ரெக்கவரி ஏஜென்ட்ஸ் வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதில்லை என்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் அதன் ஒழுங்குமுறை வரம்புக்கு உட்பட்ட பிற நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள், NBFC-க்கள் மற்றும் ARC-க்கள் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள ரிசர்வ் வங்கி, கடன்களை திரும்பப் பெறுவது தொடர்பான தனது அறிவுறுத்தல்களில் இருந்து ரெக்கவரி ஏஜென்ட்ஸ்கள் விலகி செல்வதை பல சம்பவங்கள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது .

    லோன் ரெக்கவரி ஏஜென்ட்ஸ்களின் செயல்பாடுகளால் கடன் வாங்கியோருக்கு எழும் கவலைகளை கருத்தில் கொண்டு, கடன் கொடுத்த வங்கிகள் அல்லது நிறுவனங்கள் தங்களது ஏஜன்ட்ஸ்களை கொண்டு கடனை வசூலிக்கும் முயற்சிகளின் போது எந்தவொரு நபருக்கும் எதிராக வாய் மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எவ்வித மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யப்படாது என்பதை ஒழுங்குமுறை நிறுவனங்கள் கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    PM KISAN: அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு!

    கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் அழைப்பதற்கான நேரத்தையும் ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நிலுவை கடனை திரும்ப பெறுவதற்காக கடன் வாங்கியோருக்கு கால் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.எந்தவொரு வடிவத்திலும் கடன் வாங்கியவர்களுக்கு தகாத செய்திகளை அனுப்ப கூடாது, அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் அழைப்புகளை மேற்கொள்ளுதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய வழிமுறைகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ARCs) மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    நள்ளிரவை கடந்தும் வாடிக்கையாளர்களை ரெக்கவரி ஏஜென்ட்ஸ்கள் தொடர்பு கொள்வதாக புகார்களைப் பெற்றுள்ளோம். அவர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.இதை ஏற்று கொள்ள முடியாது மேலும் குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் நற்பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. விரைவில் உரிய வழிமுறைகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏற்கெனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Loan, Personal Loan, RBI

    அடுத்த செய்தி