முகப்பு /செய்தி /வணிகம் / இந்த 3 வங்கியிலும் இப்ப கடன் வாங்குவது ரொம்ப ஈஸி! ஏன் தெரியுமா?

இந்த 3 வங்கியிலும் இப்ப கடன் வாங்குவது ரொம்ப ஈஸி! ஏன் தெரியுமா?

சேமிப்பு வட்டி

சேமிப்பு வட்டி

அந்த 3 வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :

வாடிக்கையாளர்கள் சேவையில் அசத்தும் அந்த டாப் 3 வங்கியில் இனி லோன் வாங்குவது ரொம்ப ஈஸி. அதுமட்டுமில்லை பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்களை பார்க்கலாம்.

பண்டிகை காலம் தொடங்கி விட்டாலே வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்க தொடங்கிவிடும். அந்த வகையில் தற்போது 3 முக்கிய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தேவை இருப்பவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பண்டிகை கால ஆஃபர்களில் எப்போதுமே வாடிக்கையாளர்கள் எளிதில் கடன் பெறலாம். அதிலும் கார் லோன், ஹோம் லோன் பெறுவது மிக மிக சுலபம். அந்த 3 வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கோடக் மஹிந்திரா வங்கி பண்டிகை கால சேவையாக தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. ஏற்கெனவே இந்த வங்கியில் வீட்டு கடன் 6.65% இருந்த நிலையில் அதில் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு தற்போது 6.50% சதவீதமாக அறிவித்துள்ளது. அடுத்தது பேங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியில் தற்போது பண்டிகைகால ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று வீட்டு மற்றும் கார் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. 0.25 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தற்போது வீட்டுக் கடன் 6.75% மற்றும் கார் கடன் 7.00% வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, இந்த வங்கியில் வீட்டுக் கடன்களில் செயலாக்கக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து குறைத்து தற்போது 6.55% ஆக குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை செப்டம்பர் 17 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லை விழா கால சேவையாக இந்த வங்கியில் கார் லோன், ஹோம் லோன், பென்சன் லோன், கோல்ட் லோன் ஆகியவற்றில் சேவைக் கட்டணங்கள் அல்லது செயலாக்கக் கட்டணங்களை முழுமையாக தள்ளுப்படி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Loan