• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நீங்களும் இனி சொந்த வீட்டுக்காரர் ஆகலாம்.. கைக்கொடுக்கும் வங்கிகள்!

நீங்களும் இனி சொந்த வீட்டுக்காரர் ஆகலாம்.. கைக்கொடுக்கும் வங்கிகள்!

லோன்

லோன்

பண்டிகை கால சலுகையாக இந்த வங்கியிலும் பிராஸசிங் கட்டணம் இல்லை.

  • Share this:
    வாடிக்கையாளர்களின் சொந்த வீடு கனவை நனவாக்க கைக்கொடுக்கும் வங்கிகளின் லிஸ்ட் மற்றும் முழு விபரங்களை பார்க்கலாம்.

    சொந்த வீடு குறித்து கனவு காணாத மிடில் கிளாஸ் குடும்பங்களே இல்லை எனலாம். அதிலும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அடுத்த இலக்க சொந்த வீடு வாங்குவது தான்.நாமாளும் சொந்த வீட்டுக்கு ஓனர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஹோம் லோனை ஆஃபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குறைந்த வட்டியில் உங்களை நம்பி ஹோம் லோன் வழங்க தயாராக இருக்கும் வங்கிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் எந்த வங்கியில் ஹோம் லோன் வட்டி குறைவு என்பதை பார்க்கலாம் வாங்க.

    யெஸ் பேங்கில் 6.70 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே. வேலை செய்யும் பெண்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு 6.65 சதவீதத்தில் கடன் வழங்கப்படும். இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே. அடுத்தது. கோடக் மஹிந்திரா வங்கி. இங்கு லோனுக்கான பிராசஸிங் கட்டணம் இல்லை.வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.50% ஆகும். தற்சமயம் பேங்க் ஆஃப் பரோடா 6.75 சதவீத வீட்டுக் கடனை வழங்குகிறது. பண்டிகை காலம் என்பதால் பிராசஸிங் கட்டணம் இல்லை.

    பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக் கடனுக்கு 6.60 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பண்டிகை கால சலுகையாக இந்த வங்கியிலும் பிராஸசிங் கட்டணம் இல்லை. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 6.7 சதவீத வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது. அடுத்தது எச்.எஸ்.பி.சி வங்கி. இங்கு 6.45 சதவீதத்தில் வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் 31 டிசம்பர் 2021 வரை மட்டுமே அமலில் இருக்கும். தேவை இருப்பவர்கள் இந்த ஆஃபர்கள் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்களின் சொந்த வீடு கனவை இந்த நேரத்தில் ஆவது நிஜமாக்கி கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் ஆன்லைன் தளத்திலும் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: