வங்கிக்கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

வங்கித்துறையே பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு என்றும், பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் முடிவெடுக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

வங்கிக்கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
கோப்பு படம்
  • Share this:
ஊரடங்கு காலத்தில் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதில் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் செலுத்தப்படாத தவணைத்தொகையின் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வங்கிக்கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. எனினும் கடன்தாரர்கள் மீதான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியது. வங்கித்துறையே பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு என்றும், பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் முடிவெடுக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.


அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறானதாக உள்ளதாகவும் மத்திய அரசு கூறியது.  இதையடுத்து அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது எனில் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் வினவினர்.மறுஉத்தரவு வரும் வரை தவணைத்தொகை செலுத்தாதோரின் கணக்குகளை வராக்கடன் பட்டியலில் இணைக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading