முகப்பு /செய்தி /வணிகம் / கடன் வாங்கிக் குவிக்கும் இளைஞர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடன் வாங்கிக் குவிக்கும் இளைஞர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

வங்கி கடன்

வங்கி கடன்

தனி நபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும், அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 65 சதவீதம் பேர் முதன் முறையாக தனி நபர் கடன்களை பெறுவது தெரியவந்துள்ளது.

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என பலரும் பேசி வரும் நிலையில், இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கடனில் மூழ்கி கிடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், குறுகிய கால மற்றும் குறைந்த அளவிலான கடன்களை பெறுவது தெரியவந்துள்ளது. இதனை 2017ஆம் நிதியாண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரையிலான விநியோகங்களை வைத்து பார்த்தோமேயானால், மதிப்பின் அடிப்படையில் 2.3 மடங்கும், பேசிக்கின் படி 3.8 சதவீதமும் தனி நபர்கள் கடன்கள் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதன் முறையாக கடன் பெற்ற பலருக்கும், கடன் வழங்குபவர்கள் அவர்களை பகுப்பாய்வு மற்றும் பிற டிஜிட்டல் மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதித்த பிறகே கடன் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, கடன் வாங்கியவர்களில் 65 சதவீதம் பேர் முதல் முறையாக கடன் பெற்றவர்கள் ஆவர். அதே சமயம் ப்ரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் போன்ற நுகர்வோர் பொருட்களை 35 சதவீதம் பேர் கடனில் வாங்கியுள்ளனர்.

தனி நபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும், அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனி நபர் கடன் நிலுவைத் தொகையானது மார்ச் 2019ம் ஆண்டு ரூ.26,700 கோடியாக இருந்த நிலையில், மார்ச் 2020 இல் ரூ 39,700 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 48 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 21 நிதியாண்டில் நிலுவையில் உள்ள கடன்கள் 3.6% மட்டுமே அதிகரித்து ரூ.41,200 கோடியாக உள்ளது. FY21 இல் கடன் போர்ட்ஃபோலியோவின் மதிப்பு குறைந்திருந்ததால் கடன் கணக்குகளின் எண்ணிக்கை 19 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே

மேலும் சிறிய அளவில் கடன் வாங்குபவர்கள் தான் அதனை திருப்பிச் செலுத்தும் போது மிகப்பெரிய அழுத்தத்திற்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.

சிறிய கடன் வாங்குபவர்கள்தான் திருப்பிச் செலுத்துவதில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். CRIF High Mark இன் படி, STPL கடன்களில் 8.8% கடன் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் (31-180 நாட்கள்) பணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், தனிநபர் கடன் பிரிவுகளில் இந்த அளவு 3.5% ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் கடன் வழங்கும் சந்தையின் மொத்த மதிப்பு ரூ.157 லட்சம் கோடியாகும். இதில், சில்லறை மற்றும் வணிகக் கணக்குகள் 49 சதவீதம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், சில்லறை வணிகம் 91 சதவீதமும், நுண்கடன் 157 சதவீதமும் மற்றும் வணிக கடன் 93 சதவீதமும் அதிகரித்துள்ளது.

FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு, தனிநபர் கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. CARE மதிப்பீடுகள் அறிக்கையின்படி, ஜூலை 2020ம் ஆண்டு சில்லறை மற்றும் தனிநபர் கடன்களின் வளர்ச்சி விகிதம் 11.2% ஆக இருந்த நிலையில், 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 220 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 2020ம் ஆண்டு ரூ.25.7 லட்சம் கோடியாக இருந்த நிலுவைத் தொகை 2021 ஜூலையில் ரூ.28.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bank, Bank Loan, EMI, Personal Loan