• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Loan : அவசரத்திற்கு 10 லட்சம் வரை இவ்வளவு ஈஸியா கிடைக்குமா?

Loan : அவசரத்திற்கு 10 லட்சம் வரை இவ்வளவு ஈஸியா கிடைக்குமா?

லோன்

லோன்

பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் கடன் வழக்கி வருகின்றன

  • Share this:
    உற்பத்தி, வணிகம், சேவை தொழில்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படும் முத்ரா கடன் பற்றி முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

    புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும்.குறிப்பாக இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. முத்ரா கடன் கிடைத்தவுடன் முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்த முடியும். . அடையாள அட்டை, முகவரி சான்று, ஜாதி சான்றிதழ், நிறுவனத்தின் அடையாளச் சான்று, கடந்த 6 மாத வங்கி அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பேலன்ஸ் அறிக்கை போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு வங்கியை அணுக வேண்டும்.

    இதைத்தவிர்த்து தொழில் தொடங்குவதற்கான ஆவணங்கள் சுயதொழில் குறித்த விவரங்கள் ஆகியவையும் கேட்கப்படலாம். நீங்கள் எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு வங்கியை அணுகினால் ஈஸியாக லோன் பெறலாம்.இந்த முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை நீங்க தொழில் தொடங்க கடன் பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக இந்த கடனில் 3 வகைகள் உள்ளன. சிஷு கடன் (ரூ.50,000) கிஷோர் (ரூ.50,000 மேல் 5 லட்சம் ரூபாய் வரை), தருண் (10 லட்சம் ரூபாய் )உங்கள் தேவைக்கு ஏற்ப இந்த கடன் விருப்பதேர்வுகளை தேர்ந்தெடுக்கலாம்.பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் கடன் வழக்கி வருகின்றன. நீங்கள் சுய தொழிலை செய்ய விரும்பினால், புதியதாக தொழில் தொடங்க ஆசைப்பட்டால் அல்லது சொந்த பிசினஸ் என்பது தான் உங்கள் கனவாக இருந்தால் இனியும் கவலை வேண்டாம்.

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முத்ரா கடனில் விவசாயம் சாராத தொழில்களான உற்பத்தி, வணிகம், சேவை தொழில்கள் போன்றவற்றுக்கு நீங்கள் கடன் வாங்கி கொள்ளலாம்.நீங்கள் இந்த கடனை பெற வேண்டும் என்றால் அருகில் இருக்கும் பொதுத்துறை வங்கிக்கு செல்ல வேண்டும். லோன் வாங்குவதற்கு முன்பு இந்த முத்ரா கடன் கூடுதல் விவரங்கள் மற்றும் சமீபத்திய அப்டேட்களை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். அதற்கு ஆன்லைனில் நேரத்தை செலவழிப்பதை விட ஒருமுறை நேரடியாக வங்கிக்கு சென்று விசாரித்துக் கொள்ளுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: