Home /News /business /

லோன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்க போறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!

லோன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்க போறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!

லோன் ஆப்ஸ்

லோன் ஆப்ஸ்

பர்சனல் லோன் ஆப்ஸ் மூலம் எளிமையாக கடன் கிடைப்பதால் பல கவலைகள் எழுந்துள்ளன.

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பர்சனல் லோன் ஆப்ஸ்களுக்கான பாலிசியை புதுப்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக Personal Loan Apps-கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    பர்சனல் லோன் வழங்கும் ஆப்ஸ்களின் எளிதான பயன்பாடு மற்றும் அதில் நடைமுறையில் இருக்கும் ஈஸியான அப்ரூவல் ப்ராசஸ் உள்ளிட்டவை மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்மார்ட் டிவைஸ்களில் கூகுளின் ப்ளே ஸ்டோர் மூலம் பல்வேறு பர்சனல் லோன் ஆப்ஸ்களை பயன்படுத்தி மக்கள் எளிதாக கடன்களை வாங்கி வருகின்றனர். எனினும் பல்வேறு நடைமுறைகளை தாண்டி பின்னணிகள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டிய கடன்கள், இப்போது பர்சனல் லோன் ஆப்ஸ் மூலம் எளிமையாக கிடைப்பதால் பல கவலைகள் எழுந்துள்ளன.

    ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!

    இது போன்ற கவலைகளை கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள பர்சனல் லோன் ஆப்ஸ்கள், தகுதி தேவைகளுக்கான கூடுதல் சான்றிதழை (additional proof of eligibility requirements) சமர்ப்பிக்க வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. எனவே இது சார்ந்த பாலிசி அப்டேட்டை தற்போது கொண்டு வந்துள்ளது. மேலும் பர்சனல் லோன் ஆப்ஸ்கள் தனது புதிய பாலிசிகளுக்கு இணங்க காலக்கெடுவையும் கூகுள் நிர்ணயித்து உள்ளது. இது தொடரான அறிக்கை ஒன்றில் கூகுள் கூறி இருப்பதாவது, கூகுள் ப்ளேவில் எங்கள் டெவலப்பர் கொள்கையை புதுப்பித்துள்ளோம். இந்தியாவில் பர்சனல் லோன் ஆப்ஸ்கள் தகுதித் தேவைகளுக்கான கூடுதல் சான்றிதழை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதுப்பிக்கப்பட்ட பாலிசி மே 11 முதல் அமலுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்தக் கூடுதல் ஆதாரத் தேவைகள் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பொருந்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    அதே போல பர்சனல் லோன் ஆப்ஸ்களுக்கு கூகுள் கூறி இருப்பதாவது, ”பர்சனல் லோன்களை வழங்க RBI-ஆல் உரிமம் பெற்றிருந்தால், எங்கள் மதிப்பாய்வுக்காக உங்கள் உரிமத்தின் நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து முக்கியமானது உங்கள் ஆப்ஸ் நேரடியாக பணத்தை கடனாக வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு பணக்கடன் வழங்குவதற்கான ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பானது.

    LIC : ஐபிஓ பங்கு உங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதா? நீங்களே ஆன்லைனில் பார்க்கலாம்!

    நீங்கள் நேரடியாக பணக்கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC-க்கள்) அல்லது வங்கிகள் மூலம் யூஸர்களுக்கு கடன் வழங்குவதற்கான பிளாட்ஃபார்மை மட்டுமே வழங்குகிறீர்கள் என்றால், நீங்கள் அதை துல்லியமாக எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அனைத்து பதிவு செய்யப்பட்ட NBFC-க்கள் மற்றும் வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிடுவது உட்பட, நிறுவனங்களிடமிருந்து சிறந்த வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம் என்றும் Google குறிப்பிட்டு உள்ளது. லோன் ஆப்ஸை உருவாக்கியவர் /உரிமையாளர் பற்றிய முழு தகவலும் தேவை. மேலும் டெவலப்பர் அக்கவுண்ட் நேம் உங்கள் டிக்ளரேஷன் மூலம் வழங்கப்பட்ட தொடர்புடைய பதிவுசெய்யப்பட்ட பிசினஸ் பெயருடன் மேட்ச்சாகிறதா என்பதை பர்சனல் லோன் ஆப்ஸ்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் கூகுள் அறிவுறுத்தி உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Loan app, Personal Loan

    அடுத்த செய்தி