• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அரசு தரும் ரூ.10,000 கடன்.. வியாபாரம் செய்பவர்களுக்கு ஈஸியா கிடைக்கும் தெரியுமா?

அரசு தரும் ரூ.10,000 கடன்.. வியாபாரம் செய்பவர்களுக்கு ஈஸியா கிடைக்கும் தெரியுமா?

முதலீடு

முதலீடு

கடனை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தினால் வருடத்திற்கு உங்களுக்கு கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.

  • Share this:
    பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டம் மூலம் தெருவோர வியாபாரிகள் ஈஸியா கடன் வாங்க முடியும் தெரியுமா?

    தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ், கொண்டுவரப்பட்டது தான் இந்த சிறப்பு கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும்.இதில் வாங்கும் கடன் ஓராண்டு காலத்தில் மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். அப்படி உரிய காலத்தில் இந்தக் கடனை திருப்பி செலுத்தினாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினாலோ ஆண்டொன்றுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும் என்பது கூடுதல் தகவல். நீங்கள் திருப்பிச் செலுத்தும் கடனை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தினால் வருடத்திற்கு உங்களுக்கு கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.

    இந்த கடனை வாங்க வியாபாரிகள் தங்களுடைய செல்போன் எண்ணை ஆதாருடன் இணைத்து இருக்க வேண்டும். அதே போல் 24 மார்ச் 2020ம் தேதிக்கு முன்னர் பணிபுரிந்துவரும் சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். இந்த பிரதான் மந்திரி ஸ்வநிதி திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள மறவாதீர்கள். இத்திட்டத்தின் கீழ் தெருவோர் வியாபாரிகள் தொடர்ந்து விண்ணப்பித்து கடன் பெறலாம்.

    எப்படி விண்ணப்பிக்கலாம்?

    அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ் இல்லாத வியாபாரிகள் இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்தை வாங்கலாம். அக்கடிதம் கிடைத்தவுடன் பிரதமரின் ஸ்வநிதியின் கீழ் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும். தேவை இருப்பவர்கள் பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://pmmodiyojana.in/svanidhi-yojana என்ற இணையதளத்திலும் சென்று பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: