ஹோம் /நியூஸ் /வணிகம் /

யார் உதவியும் தேவையில்லை... கனவை நனவாக்க நீங்களே ரூ. 10 லட்சம் வரை லோன் பெறலாம் தெரியுமா?

யார் உதவியும் தேவையில்லை... கனவை நனவாக்க நீங்களே ரூ. 10 லட்சம் வரை லோன் பெறலாம் தெரியுமா?

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

இரண்டு ஆண்டுகளுக்கான பேலன்ஸ் அறிக்கை போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு வங்கியை அணுக வேண்டும்.

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் விரும்பும் தொழிலை தொடங்கலாம். உங்கள் கனவை நனவாக்க யார் உதவியும் இன்றி ரூ. 10 லட்சம் வரை லோன் பெறலாம் தெரியுமா?

பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் குறித்து கேள்வி பட்டிருக்கீங்களா? இத்திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விரும்புவோருக்கு வங்கிகள் கடன் வழக்கி வருகின்றன. நீங்கள் சுய தொழிலை செய்ய விரும்பினால், புதியதாக தொழில் தொடங்க ஆசைப்பட்டால் அல்லது சொந்த பிசினஸ் என்பது தான் உங்கள் கனவாக இருந்தால் இனியும் கவலை வேண்டாம். உங்கள் கனவை நனவாக்குகள். யார் துணையும் இன்றி சொந்த காலில் வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முத்ரா கடனில் விவசாயம் சாராத தொழில்களான உற்பத்தி, வணிகம், சேவை தொழில்கள் போன்றவற்றுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. இந்த முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை நீங்க தொழில் தொடங்க கடன் பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக இந்த கடனில் 3 வகைகள் உள்ளன. சிஷு கடன் (ரூ.50,000) கிஷோர் (ரூ.50,000 மேல் 5 லட்சம் ரூபாய் வரை), தருண் (10 லட்சம் ரூபாய் )உங்கள் தேவைக்கு ஏற்ப இந்த கடன் விருப்பதேர்வுகளை தேர்ந்தெடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் இந்த கடனை பெற வேண்டும் என்றால் அருகில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு செல்ல வேண்டும். தற்போது இந்த வங்கியில் மட்டும் தான் முத்ரா கடன் வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டை, முகவரி சான்று, ஜாதி சான்றிதழ், நிறுவனத்தின் அடையாளச் சான்று, கடந்த 6 மாத வங்கி அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பேலன்ஸ் அறிக்கை போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு வங்கியை அணுக வேண்டும்.

இதைத்தவிர்த்து தொழில் தொடங்குவதற்கான ஆவணங்கள் சுயதொழில் குறித்த விவரங்கள் ஆகியவையும் கேட்கப்படலாம். நீங்கள் எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு வங்கியை அணுகினால் ஈஸியாக லோன் பெறலாம். குறிப்பாக இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும்.முத்ரா கடன் கிடைத்தவுடன் முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்தலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank Loan, News On Instagram