கிசான் கிரெடிட் கார்டுகள் இருந்தால் விவசாயிகள் ரூ. 3 லட்சம் வரை கடன் பெறலாம் தெரியுமா?
கிசான் கார்டுகள் விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அரசு தரப்பில் வழங்கப்படும் இந்த கார்டு மூலம் விவசாயிகள் பல்வேறு சலுகைகளை பெற முடியும். அப்படி ஒரு சூப்பரான திட்டம் ரூ. 3 லட்சம் வரை கடன் பெறும் வசதி குறித்து தான் இங்கே பார்க்க போகிறோம். 5 ஆண்டுகள் கால இடைவெளியில் குறைந்த வட்டியில் வழங்கப்படும் இந்த கடனை கிசான் கார்டுகள் இருந்தால் போதும் ஈஸியாக வாங்கலாம். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்குக் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.
இந்த திட்டத்தில் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு 2 சதவீத வட்டிச் சலுகை தருகிறது. அதே போல் 3 சதவீத வட்டி சலுகை பெறவும் வாய்ப்புண்டு. கடனை பெற்று சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் அப்போது 3 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தில் 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் கடனை குறிப்பிட்ட தேதியில் திருப்பி செலுத்தினால் அப்போது 4 சதவீத வட்டி மட்டுமே பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிதான வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
இந்த கடனை எப்படி பெறுவது, தேவையான ஆவணங்கள் என்னென்ன போன்ற விவரங்களை இப்போது பார்க்கலாம். கடன் பெற விரும்புவோர் https://pmkisan.gov.in/ சென்று முதலின் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதில் கேட்டப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும். அதை வங்கியில் சமர்பிக்க வேண்டும். இத்துடன் நீங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.ஆன்லைன் தவிர்த்து எஸ்பிஐ, கூட்டறவு வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் நீங்கள் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று அதை நிரப்பி சமர்பிக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.