ஒரு மாதத்திற்கு என்று ரீசார்ஜ் செய்ய போனால் 28 நாட்களுக்கு தான் பிளான்கள் இருக்கும். மாதம் முடியும் முன்னரே ரீசார்ஜ் முடிந்துவிட்டதே என்பது போல் ஆகிவிடும். ஆனால் இப்போது ஏர்டெல், ஜியோ, vi என்று எல்லா நிறுவனங்களும் 30 நாட்களுக்கான பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. மாதத்தின் நாட்கள் 28, 30 அல்லது 31 மாதமாக இருந்தாலும், முழு காலண்டர் மாத செல்லுபடியாகும் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது டெல்காம் நிறுவனங்கள் சேர்க்கவேண்டும் என்று TRAI கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி புதிய பிளான்கள் அறிமுகமாகியுள்ளன.
ஜியோ ரூ.259 பிளான்:
ஜியோவில் ரூ.259 பிளான் மூலம் 30 நாட்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வரை அனுப்பும் வசதி கிடைக்கிறது. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா,ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன
ஜியோ ரூ.296 பிளான்:
எனக்கு தினசரி டேட்டா அளவு வேண்டாம் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டா என்று வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கும் பிளான் இருக்கு. ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதோடு 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் , ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.
என்னிடம் ஏர்டெல் தான் இருக்கிறது அதற்கு எதாவது 30 நாள் பழங்கள் இருக்கிறதா என்று கேட்டால், இந்த லிஸ்ட்டை பாருங்க...
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் பிளான்:
ஜியோவைப் போலவே ஏர்டெலிலும் 30 நாளைக்கான பிளான் இருக்கிறது. ரூ.319 பிளானில் தினசரி 2ஜிபி டேட்டா , வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை கிடைக்கிறது. இதுதவிர Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் பிளான்:
மொத்தமாக டேட்டா விரும்பும் நபர்களுக்காக ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. அதன்படி 30 நாட்கள் வேலிடிட்டி உடன் மொத்தம் 25 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அது போக மற்ற ஏர்டெல் சப்போர்டிங் அணுகல்களும் உண்டு.
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்:
எனக்கு 25 ஜிபி டேட்டா கூட தேவை இல்லை. குறைவான அளவு டேட்டா இருந்தால் போதும், அழைப்பு, செய்தி அனுப்ப மட்டும் போதும் என்று நினைத்தால், ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு கட்சிதமாக பொருந்தும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு வரம்பற்ற குரல் அழைப்பு, 30 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ், விங்க் மியூசிக் மற்றும் Hellotunes நன்மைகள் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.111 திட்டம்: இந்த பிளானில் ரூ.99க்கான டாக்டைமுடன் 30 நாட்களுக்கு 200எம்பி இணைய டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1என்ற விலையில் வழங்குகிறது. ஏர்டெல்லை இரண்டாம் நிலை சிம்மாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் ஐடியாவில் ரூ.319க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டாவை, வீக்கெண்ட் ரோல் ஓவர் டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், Vi movies TV அணுகல், தினசரி 100 எஸ்எம்எஸ், binge all night உள்ளிட்ட பல நன்மைகள் 30 நாட்களுக்கு கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.337 ப்ரீபெய்ட் பிளான்:
மொத்த டேட்டா விரும்பிகளுக்காக 30 நாட்களுக்கு 28ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், Vi movies TV அணுகல், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் ரூ.337 க்கு வழங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airtel, Jio, Recharge Plan