PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும்.
இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT ஆல் அறிவிக்கப்பட்டது. ஆனால், மார்ச் மாதத்துக்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 2023 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், பான்-ஆதார் இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் CBDT மார்ச் மாத இறுதியில் அறிக்கை வெளியிட்டது.
ரூ.35 லட்சம் வரை பர்சனல் லோன்... எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
ஜூன் 30, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ம் தேதிக்கு மேற்பட்டு, அபராதத் தொகை ரூ. 1000 ஆக அதிகரிப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் கார்டு இணைப்பதற்கு, ரூ. 500 அபராதமாக செலுத்தி வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இணைக்கவில்லை ஆதார் இணைக்காத பான் எண்களுக்கான அபராதத் தொகையான ரூ. 1000 செலுத்த வேண்டும். இந்த மாத அபராதம் செலுத்த ITNS 280 (மேஜர் ஹெட் ௦௦21) என்ற செலான் எண்ணைப் பயன்படுத்தி செலுத்தலாம். அடுத்த மாதம் அபராதம் செலுத்த, ITNS 280 (மைனர் ஹெட்) என்ற செலான் எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.
வங்கி அல்லாத பாரத் பில் பேமெண்ட் யூனிட்களுக்கான நிகர மதிப்பு தேவையை குறைப்பதாக ஆர்பிஐ அறிவிப்பு!
பான் கார்டு செயலிழந்து விடும் என்று CBDT கூறி வந்த நிலையில், அபராதம் செலுத்தி ஆதார் இணைக்காத பான் அட்டையை பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அது மட்டுமின்றி, பான் கார்டு இணைக்கும் காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிருப்பது பலருக்கும் உதவியாக இருக்கும்.
வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது, நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.