ஹோம் /நியூஸ் /வணிகம் /

PPF போல GPF லிலும் செலுத்தப்படும் சந்தா தொகைக்கு வரம்பு நிர்ணயம் - மத்திய அரசு உத்தரவு!

PPF போல GPF லிலும் செலுத்தப்படும் சந்தா தொகைக்கு வரம்பு நிர்ணயம் - மத்திய அரசு உத்தரவு!

சேமிப்பு

சேமிப்பு

உங்களது சேமிப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசு ஊழியர்கள் பணி ஓய்விற்குப் பின்னர் பயன் பெறும் வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று தான் பிஎஃப் போன்றே அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் ஒரு பங்களிப்பே GPF (General provident Fund) அதாவது பொது வருங்கால வைப்புநிதி. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பணம் செய்யப்படும். இந்த நடைமுறை என்பது அனைத்து ஊழியர்களுக்கும் கிடையாது.

  டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு GPF விதிகள் பொருந்தும் என்றும், ஊழியர்கள் தங்களது ஜிபிஎஃப் கணக்கைத் திறக்கும் நேரத்தில் யாரையாவது பரிந்துரைக்கலாம் என்றும் இந்த திட்டத்தில் இருந்தது.மேலும் மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்புப் படைகளின் வருங்கால வைப்புநிதிக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதோடு பிள்ளைகளின் கல்வி, திருமணம், மருத்துவ செலவு போன்ற அவசர காலங்களில் GPF ல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை அட்வான்ஸாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களது சேமிப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தான் மத்திய அரசு ஒரு அலுவலக குறிப்பாணை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

  Read More : FDக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் லிஸ்ட் - சீக்கிரம் பணத்தை டெபாசிட் செய்து பயன்பெறுங்கள்!

  GPF ல் வந்துள்ள மாற்றங்கள் என்ன?

  ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பானையின் படி, 2022- 2023 ம் நிதியாண்டிற்கான GPF சந்தாக்களின் தொகை 5 லட்சத்தைத் தாண்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அரசு ஊழியர்களிள் மொத்த சந்தா ரூபாய் 5 லட்சத்தைத் தாண்டியிருந்தால், அவர்களது சம்பளத்தில் இருந்து ஜிபிஎஃப் சந்தாக்கள் பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இருந்தப் போதும் அக்டோபர் 2022 வரை செலுத்தப்பட்ட சந்தா தொகை ரூபாய் 5 லட்சத்தைத் தாண்டியிருந்தால் அது திரும்பப் பெறப்படுமா? அல்லது 2023- 2024 ஆம் நிதியாண்டின் சந்தாக்களுடன் சரி செய்யப்படுமா? என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

  ஆனால் புதிய நடைமுறை வருவதற்கு முன்னதாக ஜிபிஎஃப் கான குறைந்த பட்ச சந்தா தொகை 6 சதவீதமாக இருந்தது மற்றும் அதிகபட்சம் ஒரு ஊழியர் பெற்ற ஊதியத்திற்கு சமமாக இருந்தது. இதோடு ஆண்டுதோறும் செலுத்தப்படும் சந்தாக்களுக்கு எந்தவித வரம்பும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் ஜிபிஎஃப் திட்டத்தில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் விண்ணப்பித்த 15 நாள்களில் பெற்றுவிடும் வகையிலும், ஊழியர்களின் பணத்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் எடுக்க வேண்டும் என்ற காலக்கெடுவை 10 ஆண்டுகள் என குறைத்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: EPF, Money, Savings