ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, எதிர்கால கல்வி காப்பீடு என்றே காப்பீடுகள் பலவிதங்களில், பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நிதி ரீதியாக காப்பீடுகள் பெரிய உதவியாக செயல்படுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் திடீரென்று இறந்து போனால் அவர் ஆயுள் காப்பீடு பெற்றிருந்தால் அவரின் குடும்பத்திற்கு கணிசமான தொகை கிடைக்கும். இது குடும்பத்தின் எதிர்காலத்திற்கான நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
பொதுவாக ஆயுள் காப்பீடு வாங்குவது மிகவும் எளிதானது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல காப்பீடு வழங்கும் நிறுவனங்களின் இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மொபைல் செயலிகள் மூலமாகவோ சில நிமிடங்களில் காப்பீட்டைப் பெற்றுவிடலாம் என்றால் சூழல் இருந்து வந்தது.
போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த 3 திட்டத்தில் இவ்வளவு லாபமா! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
கோவிட் தொற்றில் எதிர்பாராமல் லட்சக்கணக்கானோர் இறந்து போயினர். இவர்களில் பலர் ஆயுள் காப்பீடு பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இறந்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். எனவே பெருந்தொற்று காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டன. எனவே பெருந்தொற்று காப்பீட்டிலிருந்து ஆயுள் காப்பீட்டை நீக்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தவர்களின் உடல்நலத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக இதற்கு முன்பு 1 கோடி ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு வாங்குவதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் கிடையாது. அந்த காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை செலுத்தி காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் பெற்ற பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக இறந்து போனால், அவரின் நாமினி அல்லது குடும்பத்திற்கு ₹1,00,00,000 இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். ஆனால் தற்போது அந்த சூழல் மாறிவிட்டது. அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு பெற விரும்புபவர்கள் உடனடியாக அவ்வாறு பெற முடியாது.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் வட்டி குறித்து முக்கிய அறிவிப்பு!
சமீபத்தில் மும்பையில் எச்டிஎஃப்சி நிறுவனம் வழங்கும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் மூன்றரை கோடி ரூபாய்-க்கு லைஃப் இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை ஒரு நபர் வாங்க முயற்சி செய்திருக்கிறார். அந்த நபர், கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு மீண்டவர். அவரது காப்பீட்டுத் தொகை ஒரு கோடியாக குறைக்கப்பட்டது. ஆயுள் காப்பீடு பெற விரும்பும் நபரின் வேலை அவருடைய வருமானம், உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கிடப்பட்டு அவருக்கான காப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் முடிவு செய்யப்படுகிறது,
HDFC லைப் நிறுவனத்தின் MD மற்றும் CEO ஆன, விபா பதல்கார் இதைப் பற்றி கூறுகையில், ‘நாங்கள் காப்பீடு வழியாக பாதுகாப்பு வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். எனவே, அதிக ரிஸ்க் இருக்கும் நபர்கள் தவிர யாருக்கும் ‘no’ என்று சொல்ல முடியாது. காப்பீட்டு நிறுவனங்களில் அண்டர்ரைட்டிங் விதிகளின் படி தான் அந்த நபருக்கு 3.5 கோடிக்கு காப்பீடு மறுக்கப்பட்டது. அவருக்கு கோவிட் வந்தது காரணம் அல்ல’ என்றார்.
ஆனால் காப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர் கூறுகையில், அவருடைய வேலை, அவர் வசிக்கும் இடம், குடும்பம், வருமானம் அதுமட்டுமில்லாமல் கோவிட் தொற்றுக்கு பிறகு அவர் பெற்ற சிகிச்சை, சிகிச்சைக்கான அக்சஸ் ஆகிய பல்வேறு விவரங்களும் இன்சூரன்ஸ் நிறுவனம் கணக்கில் கொண்டுதான் காப்பீட்டுத் தொகையை குறைத்தது என்று தெரிவித்திருந்தார்.
கோவிட் காலத்தில், அனைவரும் பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும் என்று அதிகப்படியான தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வதால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விண்ணப்பதாரரின் புரோஃபைலை ஆய்வு செய்து, தொகையைக் குறைப்பது பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது. ஆனால், காப்பீடு வழங்காமல் மறுப்பது, இன்ஷூர் செய்யும் தொகையை குறைப்பது, போன்றவை காலம் காலமாக இருந்து வருவது தான் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
பாலிசிபசார் இன்ஷூரன்ஸ் தரப்பில் பேசிய சஜ்ஜா பிரவீன் சௌத்ரி, ‘காப்பீடு பெற விரும்பும் நபரின் உடல்நலம் மற்றும் இதற்கு முன்பு அவர் பெற்ற சிகிச்சைகள் ஆகிய அனைத்துமே ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி ஓரளவுக்கு ஆய்வு செய்யப்படும். யாராவது காப்பீடு பெற விரும்பினால் அவரின் விவரங்கள் எதுவுமே பெற்றுக் கொள்ளாமல் அப்படியே அவருக்கு அதிக தொகைக்கான காப்பீடு வழங்க முடியாது, சில மாதங்கள் வரை மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் அல்லது பாலிசிக்கு மீண்டும் அப்ளை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு எச்டிஎஃப்சி நிறுவனம் 1700 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 2000 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீட்டை வழங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.