முகப்பு /செய்தி /வணிகம் / ரூ 22 லட்சத்தை சொந்தமாக்கலாம்..எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

ரூ 22 லட்சத்தை சொந்தமாக்கலாம்..எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்ஐசி தன் சஞ்சய் பாலிசியானது, முதிர்வு தேதியிலிருந்து பே-அவுட் காலத்தின் போது உத்தரவாதமான வருமானத்தையும், உத்தரவாதமான சேமிப்பு பலனையும் வழங்குகிறது.

பாதுகாப்பான எதிர்காலத்தை விரும்பும் இந்தியர்களுக்கு பணத்தைச் சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று எல்ஐசி (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) சேமிப்பு திட்டம். வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுடன், எல்ஐசி பாலிசியில் முதலீடு செய்வது என்பது குறைந்த அளவிலான அபாயம் கொண்டதாகவும், உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கான வழிமுறையாகவும் உள்ளது. இது ஒரு சேமிப்பு முறையாக உள்ளதால் பல இந்தியர்கள் எல்ஐசி-யில் சேமிப்பு கணக்கை துவங்குகின்றனர்.

அதே போன்று குறிப்பிட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட திட்டங்களை எல்ஐசி வகுத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வயதுடைய மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளதால் இது மிகவும் பிரபலமான வழியாக உள்ளது. அந்த வகையில், பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களில் ஒன்றாக உள்ள எல்ஐசி தன் சஞ்சய் பாலிசி பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இது இணைக்கப்படாத, தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் சிறந்த சேமிப்பை வழங்குகிறது. பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டாளர் துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

கடன் வாங்கிக் குவிக்கும் இளைஞர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

தன் சஞ்சய் பாலிசி :

எல்ஐசி தன் சஞ்சய் பாலிசியானது, முதிர்வு தேதியிலிருந்து பே-அவுட் காலத்தின் போது உத்தரவாதமான வருமானத்தையும், உத்தரவாதமான சேமிப்பு பலனையும் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வருடத்தில் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையே வருடாந்திர பிரீமியம் ஆகும். ரூ.1,000 கொண்ட வருடாந்திர பிரீமியம் அல்லது ஒற்றை பிரீமியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். வரிகள், ரைடர் பிரீமியங்கள், கூடுதல் பிரீமியங்களை அண்டர்ரைட்டிங் செய்தல் மற்றும் மாதிரி பிரீமியங்களுக்கான லோடிங்குகள் இவற்றில் உள்ளன.

ரூ. 22 லட்சம் பெறுவது எப்படி?

எல்ஐசி தன் சஞ்சய் பாலிசியானது வழக்கமான அல்லது வருடாந்திர பிரீமியம் செலுத்துதல்களைப் பொறுத்து நான்கு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. 1. வழக்கமான / வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் விஷயத்தில் நிலை வருமான நன்மைகளை பெறுதல் மற்றும் 2. அதிகரிக்க அளவிலான வருமான நன்மைகளை பெறுதல். ஒருமுறை பிரீமியம் செலுத்த கூடிய பயன்களில் இரண்டு நன்மைகள் உள்ளது. 3. ஒற்றை பிரீமியம் முறை நிலையான வருமானத்தை பெறுதல் மற்றும் 4. நிலையான வருமான நன்மையுடன் கூடிய ஒற்றை பிரீமியம் முறை இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பும் அடங்கும்.

FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

முதல் இரண்டு நன்மைகளில், எல்ஐசி தன் சஞ்சய் பாலிசியின் கீழ் பாலிசிதாரரின் இறப்புக்கு குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.3.30 லட்சமாக பெற முடியும். அடுத்து மூன்றாவது பயனிற்கு ரூ.2.50 லட்சத்தை பெற முடியும். நான்காவது பயனிற்கு லெவல் இன்கம் பெனிபிட்டுடன் கூடிய சிங்கிள் பிரீமியம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பின் கீழ், இறப்புக்கான குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ.22 லட்சத்தை பெற முடியும். பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டாளரின் இறப்புக்குப் பிறகு செலுத்த வேண்டிய பாலிசி சேமிப்பு தொகையானது நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுத் தேதிக்கு முன், அவரின் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்" என்று எல்ஐசி தனது பாலிசி ஆவணத்தில் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: LIC, Life Insurance, Savings