Home /News /business /

சிறப்பான பலன்களை தரும் எல்ஐசி-யின் சிங்கிள் ப்ரீமியம் பாலிசி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

சிறப்பான பலன்களை தரும் எல்ஐசி-யின் சிங்கிள் ப்ரீமியம் பாலிசி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.!

LIC

LIC

LIC Single Premium Policy | முதலீடுகளுக்கு பெரியவித ஆபத்து ஏதும் இன்றி, உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை அளிக்கும் நிறுவனமாக எல்ஐசி உள்ளது. இதனால், இதில் ஏராளமான மக்கள் உடனுக்குடன் பாலிசி எடுக்கின்றனர்.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனம் தான், எதிர்கால பாதுகாப்பிற்கு பணத்தை சேமிப்பதற்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் தேர்வு செய்யும் பிரபலமான நிறுவனமாக உள்ளது. கடின உழைப்பு மூலமாக ஈட்டிய பணத்தை வேறு முதலீடுகளில் போட்டு ரிஸ்க் எடுப்பதற்கு பலரும் விரும்பாத நிலையில், அவர்களின் முதன்மையான தேர்வாக எல்ஐசி இருக்கிறது.

முதலீடுகளுக்கு பெரியவித ஆபத்து ஏதும் இன்றி, உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை அளிக்கும் நிறுவனமாக எல்ஐசி உள்ளது. இதனால், இதில் ஏராளமான மக்கள் உடனுக்குடன் பாலிசி எடுக்கின்றனர். அத்தகைய பாலிசிக்களில் வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நல்ல பலன்களை தரக் கூடியதாக எல்ஐசி பீமா பட்சத் திட்டம் இருக்கிறது.

எல்ஐசி பீமா பட்சத் திட்டம் என்றால் என்ன.?

இது சேமிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் கொண்ட திட்டமாகும். இதில் மிகப்பெரிய தொகையை நீங்கள் ஒற்றை முதலீடாக செய்யலாம். பாலிசியி கால வரையறையில், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வாழ்க்கை பலனுக்கான (Survival Benefit) பணம் செலுத்தப்படுவதுடன், உங்களுக்கும், உயிருக்குமான காப்பீடு அளிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் பாலிசி மெச்சூரிட்டி அடையும்போது உங்கள் ப்ரீமியம் மற்றும் லாயல்டி அடிசன் பலன்கள் ஆகியவற்றுடன் திரும்பக் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு 3 ஆண்டுகள் முடிவிலும் 15 சதவீத உத்தரவாதத் தொகை, உங்கள் வாழ்க்கை பலனுக்கான தொகையாக வழங்கப்படுகிறது.



குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை மற்றும் தகுதி

இந்த குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் தொடங்கி, 12 அல்லது 15 ஆண்டுகள் என எடுத்துக் கொள்ளலாம். 9 ஆண்டு பாலிசியில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை ரூ.35 ஆயிரம், 12 ஆண்டு பாலிசியில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை ரூ.50 ஆயிரம், 15 ஆண்டு பாலிசியில் குறைந்தபட்ச உத்தரவாத தொகை ரூ.75 ஆயிரம் என்று வழங்கப்படுகிறது. அதிகபட்ச உத்தரவாதத் தொகைக்கு வரையறை கிடையாது. குறைந்தபட்சமாக 15 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம்.

Also Read : FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

மெச்சூரிட்டி பலன்கள்

பாலிசி மெச்சூரிட்டி அடையும்போது உங்களின் சிங்கிள் ப்ரீமியம் மற்றும் லாயல்டி அடிஷன் ஆகிய பலன்கள் வரி நீங்களாக திருப்பி தரப்படும். இதை ஒரே தொகையாகவும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது 5, 10 அல்லது 15 ஆண்டுகள் என்ற கால அளவிலும் பெற்றுக் கொள்ளலாம்.

Also Read : போஸ்ட் ஆபீஸில் உங்கள் வாழ்வை மாற்றும் திட்டம்.. ரூ.10,000 சேமித்தால் ரூ.16 லட்சம் வருமானம்!

இறப்பு பலன்கள்

பாலிசிதாரர் முதல் 5 ஆண்டுகளில் இறந்தால் அவரது குடும்பத்திற்கு முழுமையான உத்தரவாதத் தொகை வழங்கப்படும். அதுவே 5 ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தால் முழுமையான உத்தரவாதத் தொகை மற்றும் லாயல்டி அடிசன் ஆகியவை பீமா பட்சத் திட்டத்தின் படி வழங்கப்படும்.
Published by:Selvi M
First published:

Tags: LIC

அடுத்த செய்தி