ஹோம் /நியூஸ் /வணிகம் /

LIC திட்டத்தில் வந்துள்ள முக்கியமான மாற்றம் என்ன? முதலீட்டாளர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

LIC திட்டத்தில் வந்துள்ள முக்கியமான மாற்றம் என்ன? முதலீட்டாளர்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

எல். ஐ.சி

எல். ஐ.சி

LIC schemes : எல்.ஐ.சி நிறுவனம் சில திருத்தங்களை செய்து இருக்கிறது. அது என்னவென்று தெரியுமா?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  LIC குழுமத்தின் முக்கிய திட்டமான ஜீவன் அக்ஷய் (857) மற்றும் நியூ ஜீவன் சாந்தி ( 858) திட்டத்தில் சமீபத்தில் முக்கியமான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அதுக் குறித்து உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

  நாட்டிலே மிக பெரிய ஷேர் சேல் வேல்யூக்களை கொண்டு, கிட்டத்தட்ட 8.656 பில்லியன் டாலர் மதிப்புடன் மிக பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி உள்ளது என்பது நமக்கு தெரியும். வாழும் போதும், வாழ்க்கைக்கும் பிறகும் என்ற ஒன்லைனில் இந்த நிறுவனம் பலவகையான பாலிசிகளை செயல்பாட்டில் வைத்துள்ளது. உலக அளவில் உள்ள இன்சூரன்ஸ் பிராண்ட் நிறுவனங்களில் எல்ஐசி-க்கு 3ஆம் இடம் கிடைத்திருக்கிறது . எல்.ஐ.சியில் மக்களுக்கு ஏற்ற பல பாலிசி திட்டங்கள் உள்ளன. அதில் குறிப்பிடும் படியான 2 திட்டங்கள் தான் ஜீவன் அக்ஷய் மற்றும் நியூ ஜீவன் சாந்தி.

  இதையும் படிங்க.. PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!

  இதில், ஜீவன் அக்ஷய் முதலீட்டாளர்களுக்கு வழக்கமான மாத ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு பென்சன் பெற முடியும்.பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை அனுபவிக்க முடியும்.வாழ்நாள் முழுவது மாதம் மாதம் பென்சன் பெற ஒரு நல்ல முதலீடு திட்டத்தை தேடி கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஜீவன் அக்ஷய் திட்டம் கைக்கொடுக்கும் இந்நிலையில் இந்த திட்டத்தில் பிப்ரவரி 1, 2022 முதல் எல்.ஐ.சி நிறுவனம் சில திருத்தங்களை செய்து இருக்கிறது. அது என்னவென்று தெரியுமா?

  இதையும் படிங்க.. ஏப்ரல் 4 முதல் ரூல்ஸ் மாறுது.. பஞ்சாப் நேஷனல் வங்கி சொன்ன அதிர்ச்சி தகவல்!

  எல்.ஐ.சி நிறுவனம் இதன் Annuity விகிதங்களை திருத்தியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செயல்பாட்டில் கிடைக்கும், இந்த 2 திட்டங்கள், ஜீவன் அக்ஷய் (857) மற்றும் நியூ ஜீவன் சாந்தி ( 858) ஆகியவற்றில் பாலிசி  Annuity விகிதங்கள் கிடைக்கும். நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் உள்ள 2 Annuity தேர்வுகளிலும் எவ்வளவு Annuity தொகை கிடைக்கும் என்பதை கூட நீங்கள் முன்னரே தெரிந்து கொள்ள முடியும்.

  இதுக்குறித்த மேலும் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவரை அணுகலாம் அல்லது எல்.ஐ.சி அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சென்று பார்க்கலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Investment, LIC, Savings