முகப்பு /செய்தி /வணிகம் / LIC : புது வருஷத்தில் ஒரு நல்ல சேமிப்பை தொடங்க வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசி பற்றி யோசிக்கலாமே!

LIC : புது வருஷத்தில் ஒரு நல்ல சேமிப்பை தொடங்க வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசி பற்றி யோசிக்கலாமே!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

LIC scheme : எல்.ஐ.சியின் இந்த ஜீவன் லாபம் திட்டம் பங்குகளை சார்ந்து இருக்காது . இதனால் இது கட்டாயம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

  • Last Updated :

புது வருஷம் பொறந்தாச்சு. இந்த வருடத்திலாவது குடும்பத்திற்கோ, எதிர்கால செலவுக்கோ, பிள்ளைகளின் படிப்பு செலவுக்கோ எதாவது ஒரு சேமிப்பை தொடங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவர்கள், கட்டாயம் எல்.ஐ.சியின் இந்த ஜீவன் லாபம் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஸ்க் இல்லாத முதலீடுக்கு கைகொடுக்கும் எல்.ஐ.சியின் பல திட்டங்களை பற்றி இதுவரை பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று பார்க்க போவது ஜீவன் லாபம் திட்டம் குறித்து தான். 8 முதல் 59 வயது வரையிலானவர்கள் அனைவரும் இந்த பாலிசியில் முதலீடு செய்ய முடியும். பாலிசிதாரர் இறந்துவிட்டால் நாமினிக்கு பலன்கள் கிடைக்கும். இதுதவிர பல சலுகைகள் இந்த பாலிசி மூலம் பாலிசி தாரர்களுக்கு கிடைக்கிறது. அதுக் குறித்து விரிவாக பார்க்கலாம். முதலில் எல்.ஐ.சியின் இந்த ஜீவன் லாப்ம் திட்டம் பங்குகளை சார்ந்து இருக்காது . இதனால் இது கட்டாயம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க.. வங்கியில் எந்த வகையான அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்!

மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு அவசர தேவைக்கு கடன் வாங்க முடியும். 16 முதல் 25 ஆண்டுகள் வரை இந்த பாலிசியை தேர்வு செய்ய முடியும். 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் காப்பீட்டு உரிமையை தேர்வு செய்ய இந்த திட்டத்தில் உங்களுக்கு அனுமதி உண்டு. மாதம் இந்த திட்டத்தில் ரூ. 800 சேமித்தால் போதும் 25 ஆண்டுகள் கழித்து உங்கள் கைக்கு வரும் பணம் ரூ. 5.25 லட்சம். இது ஒரு தனி பாலிசி திட்டம் என்பதால் முதலீட்டாளர்கள் விருப்பம் இருந்தால் நேரடியாகவே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க.. Jio : ரூ.499 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை!

மாதம் ரூ. 800 அதிகமான தொகை என்று நீங்கள் நினைத்தால், நாள் ஒன்றுக்கு ரூ. 8 சேமித்து மாதம் ரூ. 233 கூட நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் முதிர்வு காலத்தை பொறுத்து முதிர்ச்சி தொகை மாறுபடும். குழந்தைகளின் எதிர்காலம், திருமணம், கல்வி செலவு போன்ற காரணங்களுக்காக இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்தால் பயன் நிச்சயம். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு  எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளவும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: LIC, Savings