வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் ரூ.76 சேமித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தினமும் ரூ. 76 சேமியுங்கள்

சேமிப்பு பணத்துடன் வட்டியும் சேர்த்து உங்கள் கையில் கிடைக்கும் பணம் மொத்தம் ரூ.10.33 லட்சம்

  • Share this:
    தினமும் ரூ. 76 சேமிப்பு உங்களை லட்சாதிபதி ஆக்க போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான் அப்படி ஒரு சூப்பரான திட்டம் எல்.ஐ.சியில் உள்ளது.

    வருங்காலத்தை எண்ணி கவலைப்படாத மிடில் கிளாஸ் மக்களே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக பெண்கள். பிள்ளைகளுக்காகவோ, பெற்றோர்களுக்காகவோ ஏதாவது ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கி விட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எப்படியாவது அந்த முயற்சி தடைப்பட்டு விடும் அல்லது முதலீடு தொகை அதிகமாக இருக்கும். இந்த காரணங்களால் ஒரு சிறந்த முதலீடை வருங்காலத்திற்காக இன்னும் தொடங்காமல் இருக்கிறீர்களா? இனியும் கவலை வேண்டாம் இந்த பதிவை படியுங்கள்.

    எல்.ஐ.சி. நிறுவனம் பல்வேறு சிறந்த முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமான திட்டம் தான் எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி. இந்த பாலிசி திட்டத்தில் தினமும் ரூ. 76 முதலீடு செய்தால் போதும்
    ரூ.10 லட்சத்துக்கு மேல் உங்களால் லாபம் பார்க்க முடியும். அதற்கு மிக முக்கியமான தகுதி நீங்கள் எந்த வயதில் முதலீடு திட்டத்தை தொடங்குகிறீர்கள் என்பது தான். ஒருவேளை நீங்கள் 24 வயதில் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் என்றால் நீங்கள் ரூ. 5 லட்சம் பாலிசியை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு மாத பிரீமியம் ரூ.2,281 செலுத்த வேண்டும். அப்படியென்றால் தினமும் நீங்கள் சேமிக்க வேண்டிய தொகை ரூ. 76 மட்டும்தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இத்திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீட்டாளர்கள் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டின் பலனையும் ஒரே நேரத்தில் பெறலாம். 21 ஆண்டுகள் முதலீடுக்கு பின்பு உங்கள் சேமிப்பு பணத்துடன் வட்டியும் சேர்த்து உங்கள் கையில் கிடைக்கும் பணம் மொத்தம் ரூ.10.33 லட்சம்  பாதுகாப்பாக பணத்தை சேர்த்து கை நிறைய லாபமும் பார்க்கலாம். இந்த பாலிசி குறித்த கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம் அல்லது எல்.ஐ.சி முகவரை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் இந்த திட்டத்தில் இணைந்து பலனை பெறுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: