எல்.ஐ.சியில் இருக்கும் இந்த சூப்பரான திட்டம் பற்றி தெரிஞ்சிக்காம இருக்கலாமா?

எல்.ஐ.சி திட்டம்

​​வாடிக்கையாளர் பாலிசியின் சரண்டர் மதிப்பின் அடிப்படையில் கடன் பெறலாம்.

 • Share this:
  எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று. தெரிஞ்சிக்கலாம் வாங்க.

  வாடிக்கையாளர்கள் சேவையில் பல ஆண்டுகளைக் கடந்து சென்று கொண்டிருக்கும் எல்.ஐ.சியில் இருக்கும் முதலீடு திட்டங்கள், காப்பீடு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வது கண்டிபாக கைக்கொடுக்கும். சில சமயங்களில் நாம் சிறந்த திட்டங்களை தேடி அலையும் போது இதுப்போன்ற தகவல்கள் உதவும். அந்த வகையில் இந்த பதிவில் பார்க்க போவது, எல்.ஐ.சியில் இருக்கும் ஜீவன் சிரோமணி திட்டம்.பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்கக் கூடிய மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் காப்பீட்டுத் தொகையில் குறைந்தது 1 கோடி வரை உத்திரவாதம் வழங்கப்படுகிறது.

  இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பாலிசிதாரரின் குடும்பத்தில் பாலிசி காலத்தின் போது இறப்பு ஏற்பட்டால் நிதி வழங்கப்படும். இது தவிர, முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை வழங்கப்படுகிறது.இந்த திட்டம் குறிப்பாக மருத்துவ சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. அதே போல் இதில் மூன்று விருப்ப ரைடர்கள் உள்ளன.பாலிசிதாரர்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாலிசி காலத்தின் போது அவசர தேவை என்றால் ​​வாடிக்கையாளர் பாலிசியின் சரண்டர் மதிப்பின் அடிப்படையில் கடன் பெறலாம். இந்த கடன் எல்ஐசியின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும்.இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ .1 கோடி அதிகபட்ச காப்பீடு தொகைக்கு எந்த வரம்பும் இல்லை பாலிசி காலம் 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள் வரை உள்ளது. 18 வயது நிரம்பியவர் இந்த திட்டத்தில் சேரலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: