எதிர்கால நிதி பாதுகாப்பு கருதி முதலீடுகளை செய்து வைப்பது நல்ல விஷயம் தான். அந்த வகையில் இந்தியர்கள் தேர்வு செய்வதற்கான முதலீட்டு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அதே சமயம், காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது அபாயங்கள் அற்றதாகவும், குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அமைகிறது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமுமான எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி எடுப்பதை இந்தியர்கள் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். நான் லிங்க்டு, தனிநபர் வாழ்நாள் காப்பீட்டு திட்டம், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் நலனில் கவனம் என்ற பல கோணங்களில் எல்ஐசி ஆதார் சீலா திட்டம் சிறப்புக்குரியதாக இருக்கிறது.
இந்தத் திட்டத்தில் நீங்கள் தினசரி ரூ.29 முதலீடு செய்தால் இறுதியாக உங்களுக்கு ரூ.4 லட்சம் கிடைக்கும். நிதி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு பலன்களும் இதில் கிடைக்கிறது. பாலிசிதாரருக்கு மெச்சூரிட்டி சமயத்தில் பெரும் தொகை கிடைக்கும் அல்லது இடைப்பட்ட காலத்தில் அவர் உயிரிழக்கும் அச்சத்தில் அவரது குடும்பத்திற்கான நிதி ஆதார பாதுகாப்பு கிடைக்கும்.இது மட்டுமல்லாமல், இந்த பாலிசியில் ஆட்டோ கவர் மற்றும் லோன் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உண்டு.
உத்தரவாத தொகை
ஆதார் சீலா திட்டத்தில், அடிப்படை உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகை என்பது ரூ.3 லட்சமாவும், குறைந்தபட்ச தொகை என்பது ரூ.75 ஆயிரமாகவும் இருக்கிறது. அதாவது, இந்தப் பாலிசியில் நீங்கள் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
மெச்சூரிட்டி காலம் என்பது நீங்கள் தேர்வு செய்யும் பாலிசியை பொறுத்து 10 முதல் 20 ஆண்டுகளாக உள்ளது. ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு தவணையில் நீங்கள் ப்ரீமியம் செலுத்திக் கொள்ளலாம்.
தினந்தோறும் ரூ.29
உதாரணத்திற்கு தினசரி உங்கள் பாக்கெட்டில் இருந்து ரூ.29 எடுத்து வைக்கிறீர்கள் என்றால், ஒரு ஆண்டில் நீங்கள் ரூ.10,959 முதலீடு செய்ய முடியும். 30 வயதில் இந்தத் திட்டத்தில் நீங்கள் சேர்ந்து 20 ஆண்டுகளில் மெச்சூரிட்டி பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ.3,97,000 கிடைக்கும்.
8 முதல் 55 வயது கொண்ட அனைத்து பெண்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம். மெச்சூரிட்டி தொகையை, வட்டியுடன் சேர்த்து தவணைக் காலங்களில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பாலிசியில் சேருவதற்கு மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை என்றாலும் கூட, உடல் ஆரோக்கியம் குறித்து தனி நபர் அளிக்கும் சுய உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.