பெரும்பாலான மக்கள் சமீபகாலமாக பென்சன் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. ஓய்வு காலத்தை சிறப்பாக கடத்த திட்டமிடுபவர்கள் சம்பாதிக்கும் போதே பென்சன் திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கி விடுகின்றனர். வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களை தாண்டி அரசு உத்தரவாதம் அளிக்கும் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். அந்த வகையில் பல வருடங்களாக பென்சன் திட்டங்களில் பலவகையான புதுமைகளை புகுத்தி வரும் எல்.ஐ.சி 60 வயதில் இருந்தே மாதந்தோறும் பென்சன் கிடைக்கும் அருமையான பென்சன் திட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த பாலிசியின் பெயர் சாரல் பென்சன் யோஜனா, இதில் நீங்கள் 60 வயது முதல் ஓய்வூதியம் பெறலாம். இது ஒரு வகையான ஒற்றை பிரீமியம் ஓய்வூதியத் திட்டமாகும், இதில் நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தை செலுத்த வேண்டும் பின்பு நீங்கள் வாழ்நாள் முழுவதும் பென்சன் பெறலாம்.
போஸ்ட் ஆபீஸ் VS எஸ்பிஐ..யோசித்து திட்டமிட்டால் ரூ. 7 லட்சம் உங்கள் கையில்!
இந்த திட்டத்தில் 2 பிளான்கள் உள்ளன. Life Annuity திட்டத்தில் பாலிசிதாரரின் பெயரிலேயே பாலிசி இருக்கும். எந்தவொரு சூழ்நிலையிலும், பாலிசியை மற்றொரு நபருக்கு மாற்ற முடியாது. ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். அவர் இறந்த பிறகு, அடிப்படை பிரீமியத்தின் தொகை அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும்.
Joint Pension plan இத்திட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் பென்சன் பெறலாம். இருவரில் நீண்டகாலம் இருப்பவருக்கு பாலிசியின் பலன்கள் கிடைக்கும். இருவரும் இறந்தபின் நாமினிக்கு பலன் கிடைக்கும்.
இத்திட்டத்தின் பயன் பெற குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 80 ஆண்டுகள் ஆகும். ஆன்லைனிலும், நேரடியாக எல்ஐசி அலுவலகத்திலும் சாரல் பென்சன் பாலிசியில் முதலீடு செய்யலாம். மாதாந்தரமாக, காலாண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக என உங்களுக்கு விருப்பம் போல உங்கள் பென்சன் தொகையை நீங்கள் பெறலாம்.
கை நிறைய லாபம் தரும் FD, RD, PPF திட்டங்கள் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!
பாலிசி தொடங்கி ஆறு மாதம் பின் கடனும் வாங்கிக்கொள்ளலாம்.எல்ஐசி சாரல் பென்சன் திட்டத்தில் பாலிசிதாரர் அல்லது நாமினி 60 வயதை அடைந்தவுடன் ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு நபர் 10 லட்சம் ரூபாய் ஒற்றை பிரீமியமாக டெபாசிட் செய்தால், அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் 52,500 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.இது தவிர, நீங்கள் டெபாசிட் செய்த தொகையை நடுவில் திரும்பப் பெற விரும்பினால், 5 சதவீதத்தை கழித்து, டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெறுவீர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, LIC, Life Insurance