Home /News /business /

LIC யில் பாலிசி எடுத்து இருக்கீங்களா? உடனே இதை செய்து விடுங்கள்!

LIC யில் பாலிசி எடுத்து இருக்கீங்களா? உடனே இதை செய்து விடுங்கள்!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

LIC renewal : எல்ஐசி பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கேடு மார்ச் 25 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான காலெக்கேடு அடுத்த வாரம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது கடைசி தேதி மார்ச் 25  ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்வதில் பாலிசிதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அது சார்ந்த நிதி மற்றும் உடல்நல அபாயங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையிலான திட்டத்தை எல்ஐசி கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.

    நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பயனாளர்கள், உரிய தவணையில் பணம் கட்டாமல் அது காலாவதியாகும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கொரோனா காலத்தில் பலரும் வாழ்வாதாரத்திற்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தவணைத் தொகையை கட்டத் தவறுவதால் பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில், தற்போதைய நிதியாண்டில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சலுகையை எல்ஐசி வழங்கியது. இதுபோன்ற ஒரு சலுகையை எல்ஐசி வழங்குவது இது இரண்டாம் முறையாகும்.

    இதையும் படிங்க.. பேங்க் போறதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை தெரிஞ்சிட்டு போங்க… காசோலை முறையில் புதிய மாற்றம்!

    தனிநபர் பாலிசிகள் காலாவதி ஆகியிருப்பின் அதனை மார்ச் 25ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த புதுப்பித்தல் திட்டம் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. ப்ரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான பாலிசிகள் மற்றும் தவணை காலத்தை நிறைவு செய்யாத பாலிசிகளை இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    இதுகுறித்து எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போதைய அசாதாரண சூழல்களை கருத்தில் கொண்டு, டெர்ம் அசூரன்ஸ் மற்றும் மிகுந்த அபாய தடுப்பு பாலிசிகள் தவிர்த்து, மற்ற அனைத்து பாலிசிகளுக்கும் புதுப்பித்தல் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. அதேசமயம், எத்தனை தவணைகள் பணம் செலுத்தியுள்ளீர்கள் என்பதைப் பொறுத்து இந்த சலுகை மாறும். மருத்துவ ரீதியான தகுதிகளில் எந்தவித சலுகையும் வழங்கப்பட மாட்டாது. தகுதிவாய்ந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டங்கள் ஆகியவற்றுக்கும் தாமதக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    READ MORE.. EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

    இந்த புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த பல பாலிசிகளில், வாடிக்கையாளர்கள் கடைசியாக தவணைத் தொகை செலுத்தி 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்றால், உரிய தாமதக் கட்டணம் செலுத்தி அந்தப் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம்.

    ஆயுள் காப்பீடு குறித்த தேவையை தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலம் மிக நன்றாகவே உணர்த்தியுள்ள சூழலில்,  வாடிக்கையாளர்களுக்கு  காலாவதியாகவிட்ட பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீட்டை தக்க வைப்பதுடன், தங்கள் குடும்பத்தினரின் நிதி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் எல்ஐசி நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையை வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: LIC, Life Insurance, Savings

    அடுத்த செய்தி