• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.. ஓய்வூதிய சேவை பற்றி இங்கே படியுங்கள்..

LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.. ஓய்வூதிய சேவை பற்றி இங்கே படியுங்கள்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சேவை வழங்க எல்ஐசி நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
LIC பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சேவை வழங்க எல்ஐசி நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானிய உதவியுடனான ஓய்வூதியத் திட்டமே பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டமாகும். 60 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களுக்கு திருத்தப்பட்ட விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (LIC Pradhan Mantri Vaya Vandana Yojana) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

2020 மே 26 அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்கு (2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை) இந்தத் திட்டத்தில் இணையலாம். நேரடியாக LIC அலுவலகத்திற்கு சென்றோ அல்லது LIC இணையதளத்தில் ஆல்லைனிலும் எளிதாக சேரலாம். இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India(LIC)), எண்டோவ்மென்ட் திட்டங்கள் (endowment plans), பணத்தை திரும்பப் பெறும் திட்டங்கள் (money back plans) , கால காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களையும் வழங்குகிறது, தற்போது இது ஓய்வூதிய திட்டங்களையும் (pension plans) வழங்குகிறது. 

எல்.ஐ.சி பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (LIC Pradhan Mantri Vaya Vandana Yojana) என்பது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டமாகும். பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவுக்கான ஓய்வூதிய விகிதத்தை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதுடன், 2020-21 நிதியாண்டிலிருந்து 2023 மார்ச் 31 வரை இந்த திட்டத்தை விற்பனை செய்யும் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. ஒரு வருடத்தில் விற்கப்படும் பாலிசிகளுக்கான உத்தரவாத ஓய்வூதிய விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும். 

மார்ச் 31, 2021 வரையிலான முதல் நிதியாண்டில், இந்தத் திட்டம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய ஆண்டுக்கு 7.40 சதவீத உறுதியான ஓய்வூதியத்தை வழங்கும் என்று LIC தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி பிரதான் மந்திரி வயா வந்தனா திட்ட விவரங்கள் (LIC Pradhan Mantri Vaya Vandana Yojana): 

எல்.ஐ.சியின் பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உடனடி ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஒரு லம்ப்சம் தொகையை (lumpsum amount) செலுத்துவதன் மூலம் இதை வாங்க முடியும் என்று LIC தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பாலிசி காலத்திற்கான ஓய்வூதிய பேமெண்ட்டுகளை இந்த திட்டம் வழங்குகிறது, பத்தாம் ஆண்டின் இறுதியில் கொள்முதல் விலை ரிட்டர்ன் செய்து கொள்ளலாம்.

ஓய்வூதியத்தின் முதல் தவணை 1 ஆண்டு, 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு அதை வாங்கிய நாளிலிருந்து ஓய்வூதிய பேமெண்ட் முறையைப் பொறுத்து அதாவது ஆண்டு, அரை ஆண்டு, காலாண்டு அல்லது மாதந்தோறும் செலுத்தப்படும். ஓய்வூதிய பேமெண்ட்டுகளை சந்தாதாரர் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பெறலாம். சந்தாதாரர் இறந்தால், திட்டத்தின் கொள்முதல் விலை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு திருப்பித் தரப்படும். மொத்தமாக ஒரு பெரிய தொகையை செலுத்தி இத்திட்டத்தின் கீழ் பாலிசிகளை வாங்கிக் கொள்ளலாம். பென்சன் தொகையையோ, வங்கும் விலையையோ தேர்வு செய்வதற்கு ஓய்வூதியதாரருக்கு உரிமை உண்டு.

Also read... Gold Rate | உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனாவை எந்த மருத்துவ பரிசோதனையும் இல்லாமல் வாங்கலாம். மேலும் சுய அல்லது உங்கள் மனைவிக்கு ஏதேனும் முக்கியமான நோய் இருந்தால் அதுபோன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் பாலிசி காலத்தின் போது முன்கூட்டியே வெளியேற உங்களை இந்த திட்டம் அனுமதிக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் செலுத்த வேண்டிய சரணடைதல் மதிப்பு (Surrender value) கொள்முதல் விலையில் 98 சதவீதமாக இருக்கும் என்று எல்.ஐ.சி யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் சந்தாதாரர்கள் மூன்று ஆண்டுகள் பாலிசியுடன் இணங்கிய பின்னர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து (Life Insurance Corporation of India) கடன் பெறலாம். LIC வழங்கும் அதிகபட்ச கடன் தொகை கொள்முதல் விலையில் 75 சதவீதம் ஆகும். இது அரசு மானியத்துடன் மூத்த குடிமக்களுக்காக எல்.ஐ.சி செயல்படுத்தும் ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9,250 ஓய்வூதியத்தை பெறலாம்.மூத்த குடிமக்கள் மாதம் 1000 முதல் 10 ஆயிரம் வரை பென்சன் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தை LIC நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேற்சொன்னவைகளை ஆராய்ந்து இந்த திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: