பாலிசிதாரர்களின் காலாவதியான தனி நபர் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி. நிறுவனம் சிறப்பு முகாம் ஒன்றை நடத்துகிறது . எல்ஐசி பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் எனப்படும் எல்ஐசி நிறுவனம் எதிர்கால சேமிப்புக்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் தேர்வு செய்யும் பிரபலமான நிறுவனமாக உள்ளது. முதலீடுகளுக்கு பெரிய ஆபத்து ஏதும் இன்றி, உத்தரவாதத்துடன் கூடிய பலன்களை அளிக்கும் நிறுவனமாக எல்ஐசி உள்ளது. இதனால், இதில் ஏராளமான மக்கள் உடனுக்குடன் பாலிசி எடுக்கின்றனர். அத்தகைய பாலிசிகள் வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நல்ல பலன்களை தரக் கூடியதாக இருப்பதாக நம்புகின்றனர். இந்த நிறுவனத்தில் பாலிசி எடுத்து விட்டு அதை காலாவதியாக பாதியிலே மிஸ் செய்தவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு.
PM KISAN: அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு!
காலாவதியான தனி நபர் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி. நிறுவனம் சிறப்பு முகாம் ஒன்றை 17.08.2022 முதல் 21.10.2022 வரை நடத்துகிறது. யூலிப் பாலிசிகளை தவிர மற்ற அனைத்து பாலிசிகளையும் இந்த சிறப்பு புதுப்பித்தல் முகாமில் உங்களால் புதுபித்து கொள்ள முடியும். முதல் தவணை ப்ரீமிய தேதியில் இருந்து 5 வருடங்களாக ப்ரீமியம் செலுத்தப்படாத பாலிசி திட்டங்களை தாமத கட்டண சலுகையுடன் புதுப்பித்துக்கொள்ளலாம்.
இன்னும் டைம் இருக்கு..பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நீங்களும் சொந்த வீடு கட்டலாம்!
இதுதொடர்பாக எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த சிறப்பு புதுப்பிப்பு முகாமில், பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத அனைத்து பாலிசிகளும், சலுகை தாமதக் கட்டணத்துடன் புதுப்பிக்கப்படும். பிரீமியம் செலுத்தாமல் நிறுத்தப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள அனைத்து பாலிசிகளும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக எல்.ஐ. சியில் பாலிசிகளை பாதியிலே தவற விட்டவர்கள் இந்த சூப்பரான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, LIC, Pension Plan