LIC நிறுவனம் சமீபத்தில் அறிமுகபடுத்திய புதிய ஆயுள் காப்பீடு திட்டமான 'தன் ரேகா'திட்டம் குறித்து விரிவான தகவல்களை பார்ப்போம்.
இந்த திட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு மட்டுமில்லை பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல்
மூன்றாம் பாலினத்தவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி இதுவரை பல வகையான பாலிசி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.ஐ.சியின் ஆபுள் காப்பீடு திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக செயல்படுகிறது. இதன் மூலம் பலன் கண்டவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் எல்.ஐ.சி நிறுவனம், அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய பாலிசி திட்டம் தான் இந்த தன் ரேகா.
இந்த பாலிசியில் பாலிசிதாரரின் முதிர்ச்சியின் போது, பாலிசிதாரர் ஏற்கனவே பெற்ற எந்தத் தொகையையும் கழிக்காமல் முழு காப்பீட்டுத் தொகையையும் அவரின் கைக்கு வழங்கப்படும். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் சேர அதிகபட்ச வயது வரம்பு 35 முதல் 55 வயது வரை. இந்த திட்டத்தில் 3 வகையான பாலிசி காலம் உள்ளது 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள். இதில் உங்கள் வருவாய் மற்றும் சேமிப்புக்கு ஏற்றப்படி பிரீமியம் ஆண்டை தேர்ந்தெடுத்து தொகையை டெபாசிட் செய்யலாம்.
SBI தரும் அருமையான வாய்ப்பு.. 24 மணி நேரம் கடன் கிடைக்குமாம்!
20 வருட பாலிசி ஆண்டுகள் என்றால் 10 வருட பிரீமியத்தை செலுத்த வேண்டும். 30 வருட ம் என்றால் 15 வருட பிரீமியம் செலுத்த வேண்டும். 40 வருட பாலிசியை தேர்வு செய்தால் 20 வருட பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பின்பு தொடக்கம் முதல் இறுதி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில், அடிப்படை தொகையில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் முதிர்ச்சியின் போது ஏற்கனவே பெற்ற எந்தத் தொகையையும் கழிக்காமல் முழு காப்பீட்டுத் தொகையையும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தின் மீது ஆர்வம் இருப்பவர்கள் முழுமையாக விசாரித்த பின்பு பாலிசியில் சேர்வது குறித்து முடிவு எடுக்கலாம்.
Bank Strike: எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு LIC ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம் அல்லது LIC முகவரையும் அணுகி விவரம் அறியலாம்.
.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.