• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெற்றோர்கள் கவனத்திற்கு.. பிள்ளைகளின் வருங்காலத்திற்கு ரூ. 17 லட்சம் சேமிக்க இதோ வழி!

பெற்றோர்கள் கவனத்திற்கு.. பிள்ளைகளின் வருங்காலத்திற்கு ரூ. 17 லட்சம் சேமிக்க இதோ வழி!

எல்.ஐ.சி திட்டம்

எல்.ஐ.சி திட்டம்

நெட் ப்ரீமியம் 8,55,107 என்று உங்களுக்கு மொத்தமாக 17.13 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்படும்.

  • Share this:
    எல்.ஐ.சியில் இருக்கும் Jeevan Labh 836 திட்டம் குறித்து கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் உங்களால் 17 லட்சம் வரை உங்கள் பிள்ளைகளுக்காக சேமித்து வைக்க முடியும்.

    முதலீடு என்பது தற்சமயத்தில் கைக்கொடுக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் அதன் பயனை உணரலாம். அதிலும் பிள்ளைகளின் கல்வி செலவு, எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் செய்த முதலீடு கைக்கொடுத்தால் அதைவிட வேறு சந்தோஷம் இல்லை. அந்த வகையில் எல்.ஐ.சியில் இருக்கும் Jeevan Labh 836 திட்டம் முழுக்க முழுக்க உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நம்பி முதலீட்டில் இறங்கலாம். ஒருவேளை உங்களுக்கே அவசர தேவை என்றாலும் இந்த ஸ்கீம்மை பயன்படுத்தி கொள்ளலாம்.

    அதற்கு இந்த ஸ்கீம் முடியும் வரை கூட நீங்கள் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தில் மூன்று வருடங்களுக்கான ப்ரீமியமை முழுமையாக செலுத்தி இருந்தால் கூட போதும் இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு உங்களால் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்க முடியும். இந்த ஸ்கீம்மில் எப்படி சேமிப்பது? குறித்த விவரங்களை பார்க்கலாம்.
    இந்த திட்டத்தில் 3 வகையான மெச்சூரிட்டியுடன் கூடிய பி.பி.டி. பாலிசிகள் உள்ளன. 10 வருடங்கள், 15 வருடங்கள், மற்றும் 16 வருடங்கள். இதில் எந்த திட்டத்தில் சேர்ந்தால் 17 லட்சம் பெற முடியும் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

    1 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகள் உள்ள பெற்றோர்ர்கள் 16 வருட பி.பி.டி. பாலிசியில் முதலீடு செய்தால் நல்லது. மற்ற எல்.ஐ.சி. பாலிசிகளை போன்றே இந்த திட்டத்திலும் ப்ரீமியம் தொகை 4.5% மற்றும் வட்டியுன் சேர்த்து கட்ட வேண்டும். இந்த ப்ரீமியத்தை நீங்கள் ஆண்டு, அரையாண்டு, மாதாந்திர மற்றும் தினசரி முறையிலும் செலுத்திக் கொள்ளலாம்.இந்த திட்டத்தில் சேர்ந்த நபர், மாத ப்ரீமியம் தொகையாக ரூ. 7,415 கட்ட வேண்டும். இதுவே தினசரி என்றால் ரூ. 238 கட்ட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ப்ரீயம் செலுத்த விருப்பப்பட்டால் ரூ. 87,200 கட்ட வேண்டும். இதுவே அரையாண்டுக்கான ப்ரீமியம் ரூ. 44,046 , காலாண்டுக்கான ப்ரீமியம் ரூ. 22,246 என  உங்கள் விருப்பப்படி ப்ரீமியம் தொகை செலுத்தலாம். இதை சரியாக 16 ஆண்டுகள் கட்டி முடித்த பின்பு உங்களுக்கு கிடைக்கும் தொகை 10 லட்சம் + நெட் போனஸ் 6,88,000 + இறுதி கூடுதல் போனஸ் 25,000 + செலுத்தப்பட்ட நெட் ப்ரீமியம் 8,55,107 என்று உங்களுக்கு மொத்தமாக 17.13 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்படும்.

    இந்த சேமிப்பை உங்கள் பிள்ளைகளுக்காக தொடங்கி இருந்தால் 16 ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக அந்த தொகை உங்கள் பிள்ளைகளின் மேல் படிப்புக்கு அல்லது தொழில் செய்ய சரியான நேரத்தில் உதவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: