Home /News /business /

LIC : இப்படி ஒரு பாலிசியை எடுத்து வைத்தால் போதும்.. வாழ்நாள் முழுவதும் ராஜ வாழ்க்கை தான்!

LIC : இப்படி ஒரு பாலிசியை எடுத்து வைத்தால் போதும்.. வாழ்நாள் முழுவதும் ராஜ வாழ்க்கை தான்!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

LIC : திட்டத்தின் கீழ் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    எல்ஐசி பாலிசியில் இருக்கும் சூப்பரான பென்சன் திட்டம் பற்றி இன்று பார்க்கலாம். ‘ஜீவன் அக்‌ஷய்’ பாலிசி மிகச் சிறந்த பென்ச்ன் திட்டமாக எல்.ஐ.சியில் செயல்பாட்டில் உள்ளது.

    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்.ஐ.சியில் மக்களுக்கு ஏற்ற பல  பாலிசி திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு திட்டம் தான் இந்த ஜீவன் அக்‌ஷய்.  இதுமுதலீட்டாளர்களுக்கு வழக்கமான மாத ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு 9,000 ரூபாய் பென்சன் பெற முடியும்.பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை அனுபவிக்க முடியும்.

    இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது ஒரு ஆண்டு, அரை ஆண்டு, காலாண்டு மற்றும் மாத அடிப்படையில் ஓய்வூதியத்தை தேர்வு செய்யலாம்.குறைந்தபட்ச வயது 30 ஆண்டுகள். அதிகபட்சமாக 85 வயது.குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் கூட்டு முதலீட்டாளர்களாகவும் மாறலாம். இந்த ஜீவன் அக்‌ஷய் திட்டத்தின் கீழ் கடன் வசதி இல்லை.

    இப்போது இந்த திட்டத்தில் பென்சன் எப்படி கிடைக்கிறது என பார்க்கலாம். உங்களிடம் ரீடைர்மெண்ட் பணம் மொத்தம் ரூ .9,16,200 கையில் இருக்கு என்றால் அதை வீண் செலவு செய்யாமல் அப்படியே இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ .6,859 வாழ்நாள் ஓய்வூதியம் பெறுவீர்கள். காலாண்டு அடிப்படையில் ரூ .20,745 மற்றும் அரை ஆண்டு அடிப்படையில் ரூ. 42,008 மற்றும் ஆண்டு அடிப்படையில் ரூ. 86,265 வரை பெறலாம். இந்தத் திட்டத்தில் 1 சதவீத வரிச்சலையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

    எனவே வாழ்நாள் முழுவது மாதம் மாதம் பென்சன் பெற ஒரு நல்ல முதலீடு திட்டத்தை தேடி கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஜீவன் அக்‌ஷய் திட்ட்ம் கைக்கொடுக்கும் இதில் சந்தேகம் வேண்டாம். முதலீடு தொகை பெரியது என தயக்கம் வேண்டாம் உங்கள் வருமானத்திற்கு ஏற்றார் போல் முதலீடு செய்யலாம். முதலீட்டை பொறுத்து பென்சன் தொகை மாறுபடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: LIC

    அடுத்த செய்தி