Home /News /business /

LIC பாலிசியுடன் உங்கள் பான் கார்டை இணைப்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

LIC பாலிசியுடன் உங்கள் பான் கார்டை இணைப்பது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

எல்.ஐ,.சி பாலிசி

எல்.ஐ,.சி பாலிசி

LIC policy : எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுடன் பான் விவரங்களைப் இணைத்திருக்க வேண்டியது

    2022-2023ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி அன்று தாக்கல் செய்தார். அதில் வெளியான முக்கியமான அறிவிப்புகளில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான LIC  IPO வெளியிடப்படும் என்பதும் ஒன்று.

    சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி ஆகும். இதன் 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலமாக சுமார் 75,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசால் நிதி திரட்ட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி-யில் 25 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் உள்ள நிலையில், மத்திய அரசு வெளியிட உள்ள ஐபிஓ-வில் மொத்த பங்குகளில் 10 சதவீத பங்குகளை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!

    லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தனது தனது மெகா ஆரம்ப பொது வழங்கலுக்கான வரைவை (ஐபிஓ) காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த 13ம் தேதி வழங்கியுள்ளது. வரைவு ஆவணங்களின்படி, எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி ஐபிஓவில் 10 சதவீதம் வரை ஒதுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. தகுதியுள்ள பாலிசிதாரருக்கான மொத்த முன்பதிவு சலுகை அளவு 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள காப்பீட்டு ஒழுங்குமுறை, பாலிசிதாரர்கள் தள்ளுபடி விலையில் பதிவு செய்யலாம் என்றும் எல்ஐசி ஐபிஓ தொடங்கும் முன் தள்ளுபடியின் அளவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    எல்ஐசி பாலிசிதாரர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

    எல்ஐசியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுள் காப்பீட்டுக் திட்டங்களை வைத்திருப்பவர்கள், முன்பதிவு செய்யப்பட்ட பகுதியின் கீழ் விண்ணப்பிக்க முடியும். எல்ஐசி ஐபிஓ பாலிசிதாரர்களின் ஒதுக்கீட்டின் கீழ் ஒருவர் ரூ.2 லட்சம் வரை ஏலம் எடுக்கலாம். முன்பதிவு செய்யப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் எல்ஐசி ஐபிஓவிற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற, பிப்ரவரி 28,2022க்குள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளுடன் பான் விவரங்களைப் இணைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் பாலிசிதாரர்களுக்கு டிமேட் கணக்கு இருக்க வேண்டும். இவை இருந்தால் எல்.ஐ.சி. ஐபிஓவில் பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க முடியும்.

    read more .. State bank வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேராக செல்ல வேண்டாம்.. காரணம் இருக்கு!

    கடந்த ஆண்டு வெளியான விளம்பரம் ஒன்றில் LIC நிறுவனம்: "இதுபோன்ற எந்தவொரு பொதுப் பங்களிப்பிற்கும் பாலிசிதாரர்கள் தங்கள் பான் விவரங்களை அப்டேட் செய்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் எந்தவொரு பொது வழங்கலுக்கும் சந்தா செலுத்துவது சரியான டிமேட் கணக்கு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்" கூறியிருந்தது.

    LIC பாலிசியுடன் பான் கார்டை இணைப்பது எப்படி?

    1. https://licindia.in/ என்ற இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ LIC இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/ என்ற நேரடி இணைப்பைப் பயன்படுத்தலாம்.

    2. எல்.ஐ.சி இணையதளத்தில் உள்ள "ஆன்லைன் சேவைகள்" பிரிவில், நீங்கள் "ஆன்லைன் பான் பதிவு" விருப்பத்தை கிளிக் செய்யவும்.

    3. பான், எல்ஐசி பாலிசி எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்கவும். இதனை நிரப்பும் போது போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து விவரங்களையும் சரியாக வழங்க வேண்டும்.

    4. தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு டிக் செய்ய வேண்டும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

    5. கேப்ட்சாவை சரியாக enter செய்த பிறகு, Get OTP” என்பதை கிளிக் செய்ய வேண்டும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.

    6. அங்கிருந்து உங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும்” என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு OTPயை பதிவிடவும்.

    7. நீங்கள் பதிவிட்ட OTP சரியானதாக இருந்தால் “பாலிசியுடன் இணைப்பு பான் - ஒப்புதல்” என்ற பக்கம் தோன்றும். அதனையடுத்து கடைசியாக “பான் பதிவுக்கான கோரிக்கை பெறப்பட்டது” என்ற செய்தியுடன் எல்.ஐ.சி பாலிசியுடன் பான் எண் இணைக்கப்பட்ட செய்தி தோன்றும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: LIC, Life Insurance

    அடுத்த செய்தி