Home /News /business /

பெண்களுக்கான எல்.ஐ.சி பாலிசி: ஒரு நாளைக்கு ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சத்தை பெறலாம்!

பெண்களுக்கான எல்.ஐ.சி பாலிசி: ஒரு நாளைக்கு ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சத்தை பெறலாம்!

LIC

LIC

LIC Policy | எல்.ஐ.சி ஆதார் ஷீலா திட்டம் என்கிற முக்கிய திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக பாலிசியை தொடங்கலாம்.

    பெண்களுக்கு பல வகையான பாலிசிகள் உள்ளன. ஆனால், அவற்றில் எது சிறந்ததோ அதை தான் பெரும்பாலும் தேர்வு செய்வார்கள். அந்த வகையில் எல்.ஐ.சி வழங்கும் சில முக்கிய பாலிசிகள் அதிக பயனை தர கூடியவையாக உள்ளன. எல்.ஐ.சி-யானது கிட்டத்தட்ட அனைத்து வயது மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களைக் வழங்குகிறது. வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களுக்கு அடுத்தாக, எல்.ஐ.சி திட்டங்களில் முதலீடு செய்வது இந்தியர்களிடையே பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் எல்.ஐ.சி ஆதார் ஷீலா திட்டம் என்கிற முக்கிய திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக பாலிசியை தொடங்கலாம். இந்த பாலிசியின் கீழ், தினமும் ரூ.29 முதலீடு செய்தால் ரூ.4 லட்சத்தை பெற முடியும். இந்த ஒரு பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது. பாலிசிதாரரின் முதிர்ச்சி காலத்திற்கு முன் துரதிர்ஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்படும். கூடுதலாக, இந்தத் திட்டம் அதன் ஆட்டோ கவர் மற்றும் கடன் வசதி தேவைகளையும் கொண்டுள்ளது.

    எல்.ஐ.சி ஆதார் ஷீலா பாலிசி

    இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ஒருவருக்கு ரூ. 75,000 ஆகும், அதே போன்று எல்.ஐ.சி ஆதார் ஷீலா திட்டத்தின் கீழ் அதிகபட்ச அடிப்படைத் தொகை ரூ. 3 லட்சமாக உள்ளது. அதன்படி இந்த பாலிசியில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்தை முதலீடு செய்யலாம். இந்த பாலிசியின் முதிர்வு காலம் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கிறது. இதன் பிரீமியம் தொகையை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

    Also read : குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

    அதன்படி ஒரு நாளைக்கு 29 ரூபாய் சேமித்தால், ஒரு வருடத்தில் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் 10,959 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இதை 20 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்து வந்தால் சிறந்த தொகை உங்களுக்கு கிடைக்கும். அதன்படி 20 ஆண்டுகளில் 2,14,696 ரூபாய் முதலீடு செய்வீர்கள். எனவே இறுதியாக உங்களின் பாலிசி முதிர்வு காலத்தில் 3,97,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். 8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமலே பாலிசியை தொடங்கலாம் என்று எல்ஐசி தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.

    சேமித்த பணத்தை தவணை முறையிலும் நீங்கள் பெற்று கொள்ளலாம். வெவ்வேறு முறைகளில் செலுத்துவதற்கான குறைந்தபட்ச தவணைத் தொகைக்கு உட்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டபடி, ஆண்டு அல்லது அரையாண்டு அல்லது காலாண்டு அல்லது மாதாந்திர இடைவெளியில் முன்கூட்டியே செலுத்தப்படும்.இரண்டு முழு வருட பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால், பாலிசி காலத்தின் போது பாலிசிதாரரால் எந்த நேரத்திலும் பாலிசியை சரண்டர் செய்ய முடியும். பாலிசியை சரண்டர் செய்யும் போது, கார்ப்பரேஷன் சரண்டர் மதிப்பிற்கு இணையான உத்தரவாதமான சரண்டர் மதிப்பு மற்றும் சிறப்பு சரண்டர் மதிப்பிற்கு சமமாக செலுத்த வேண்டும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: LIC, Life Insurance

    அடுத்த செய்தி