• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • LIC யில் முதலீடு செய்ய முடிவு எடுத்துவிட்டீர்களா? அப்ப இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

LIC யில் முதலீடு செய்ய முடிவு எடுத்துவிட்டீர்களா? அப்ப இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்.ஐ.சியில் வாழ்நாள் முழுவது நீங்கள் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவீர். உங்கள் முதலீடு பொறுத்து பென்சன் தொகை மாறுபடும்.

  • Share this:
    எல்.ஐ.சியில் முதலீடு செய்வது என்பது கண்டிப்பாக பாதுகாப்பாக ஒரு விஷயம் தான். அப்படி முடிவு எடுத்தவர்கள் அதில் இருக்கும் பெஸ்ட் ஸ்கீம் பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

    எல் ஐ சியில் . காப்பீட்டு திட்டங்கள் அல்லது பென்சன் திட்டங்கள் என உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி சேமிப்பு என்பது என்றுமே கைக்கொடுக்கும் அந்த வகையில் பலரின் தேர்வாக இருக்கும் எல்.ஐ.சி மிகச் சிறந்த பென்சன் திட்டங்களில் ஒன்றான ஜீவன் சாந்தி திட்டம் குறித்த விரிவாக தகவல்களை இங்கே பார்க்கலாம்.சரியாக நீங்கள் ரூ. 1,50,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேர்கிறீர்கள் என்றால் வருடத்திற்கு உங்களுக்கு ரூ. 12,000 பென்சன் கிடைக்கும். வாழ்நாள் முழுவது நீங்கள் பென்சன் பெற தகுதியுடையவர்கள் ஆவீர். உங்கள் முதலீடு பொறுத்து பென்சன் தொகை மாறுபடும்.

    அதிகமான தொகை என்றால் பென்சன் தொகையை அதிகரிக்கும். இந்த திட்டத்தை ஆஃபலைன் மற்றும் ஆன்லைனிலும் தொடங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவரை தொடர்புகொள்ளவும். சரியாக 30 வயதில் நீங்கள் நல்ல பென்சன் திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய தொடங்கினால் வருங்காலத்தில் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவருக்கும் அது உதவலாம்.உங்களின் தேர்வை பொறுத்து நீங்கள் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். எல்.ஐ.சியில் செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்தில் ஒருவர் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை இருக்கும் காலக்கட்டத்தில் தொடங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்து மாதம் மாதம் பென்சன் பெறலாம். அதிகபட்சம் தொகை என்பது வரையறை இல்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தலாம்.இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம், ஒருவர் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையான முழு உத்தரவாதத்துடன் கூடிய பென்சன் தொகையை பெறலாம். இந்த திட்டத்தில் தேவைக்கேற்ப 2 விருப்பத்தேர்வுகளும் உள்ளன. Immediate Annuity மற்றும் Deferred Annuity. இந்த இரண்டு விருப்பத்தேர்வுகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம், வட்டி மற்றும் செட்டில்மெண்ட் விதிமுறைகளை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: